‘ஆழி’… பிக்பாஸ் தாமரையின் முதல் படத்தின் பர்ஸ்ட் லுக்..! போஸ்ட்டரில் இதை கவனித்தீர்களா?..

Author: Vignesh
11 October 2022, 3:00 pm

தெருக்கூத்து கலைஞர் தாமரை செல்வி, பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மூலம் பிரபலமான நிலையில், தற்போது திரைப்பட நடிகையாக மாறியுள்ளார்.

தாமரை செல்வி பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மற்றும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சிறப்பாக விளையாடி, மற்ற போட்டியாளர்களுக்கு டஃப் கொடுத்ததால், இவர் மீது தனி எதிர்பார்பை ஏற்படுத்தியது.

நிகழ்ச்சிக்குள் இவர் வந்த வேகத்திலேயே பிக்பாஸ் வீட்டை விட்டு செல்வார் என பலர் எதிர்பார்த்தனர். வரும் போது, கள்ளக்கபடம் இல்லாமல் இவர் பேசியது, நடந்து கொண்ட விதம் போன்றவை இவர் நடிக்கிறாரோ என்கிற சந்தேகத்தை மற்ற போட்டியாளர்களுக்கும் கூட வரவைத்தது. மேலும், பெரிதாக எந்த ஒரு அவப்பெயரும் இன்றி வெளியே வந்தார் தாமரை.

BB ஜோடிகள் நிகழ்ச்சியில், தன்னுடைய கணவருடன் சேர்ந்து நடனத்திறமையை வெளிக்காட்டி ஃபைனல் வரை வந்தார். ஒரு சில காரணங்களால், இவரால் வெற்றி கோப்பையை கைப்பற்ற முடியாமல் போனது. தனியாக ஒரு யூடியூப் பக்கம் திறந்து அதன் மூலமும் தற்போது சம்பாதித்து வருகிறார்.

thamarai_updatenews360

இந்த நிலையில், பிக்பாஸ் தாமரைக்கு ஜாக்பாட் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது சினிமா வாய்ப்பை தட்டி தூக்கியுள்ளார். தற்போது தாமரையின் முதல் படத்தின் ஃபஸ்ட் லுக் இப்போது வெளியாக அவரது ரசிகர்கள் அதனை வைரலாக்கி வருகிறார்கள். மாதவ் ராம் தாஸ் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ஆழி என்று பெயரிட்டுள்ளனர்.

தாமரையின் இந்த படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியானநிலையில் இந்த படம் கடல் மற்றும் கடலோர பகுதி மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டதாக இருக்கலாம் என எதிர்பாக்கப்படுகிறது.

இதோ தாமரை படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர்,

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 590

    0

    0