“ஆராரிராரிரோ கேட்குதம்மா நேரினில் வந்தது என் நிஜமா”… நீண்ட வருடங்களுக்கு பிறகு முதல் கணவரின் மகனை சந்தித்த பிக்பாஸ் தாமரை..! (வீடியோ)

Author: Vignesh
22 February 2023, 1:44 pm

தெருக்கூத்து கலைஞர் தாமரை செல்வி, பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மூலம் பிரபலமான நிலையில், தற்போது திரைப்பட நடிகையாக மாறியுள்ளார்.

தாமரை செல்வி பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மற்றும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சிறப்பாக விளையாடி, மற்ற போட்டியாளர்களுக்கு டஃப் கொடுத்ததால், இவர் மீது தனி எதிர்பார்பை ஏற்படுத்தியது.

நிகழ்ச்சிக்குள் இவர் வந்த வேகத்திலேயே பிக்பாஸ் வீட்டை விட்டு செல்வார் என பலர் எதிர்பார்த்தனர். வரும் போது, கள்ளக்கபடம் இல்லாமல் இவர் பேசியது, நடந்து கொண்ட விதம் போன்றவை இவர் நடிக்கிறாரோ என்கிற சந்தேகத்தை மற்ற போட்டியாளர்களுக்கும் கூட வரவைத்தது. மேலும், பெரிதாக எந்த ஒரு அவப்பெயரும் இன்றி வெளியே வந்தார் தாமரை.

BB ஜோடிகள் நிகழ்ச்சியில், தன்னுடைய கணவருடன் சேர்ந்து நடனத்திறமையை வெளிக்காட்டி ஃபைனல் வரை வந்தார். ஒரு சில காரணங்களால், இவரால் வெற்றி கோப்பையை கைப்பற்ற முடியாமல் போனது. தனியாக ஒரு யூடியூப் பக்கம் திறந்து அதன் மூலமும் தற்போது சம்பாதித்து வருகிறார்.

thamarai_updatenews360

இந்த நிலையில், பிக்பாஸ் தாமரைக்கு ஜாக்பாட் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது சினிமா வாய்ப்பை தட்டி தூக்கியுள்ளார்.

இந்நிலையில், அவர் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள், ஓலை வீடு என அவரது சில மோசமான பக்கம் காட்டப்பட்டது. இதனால் அவருக்கு பலரும் உதவிகரம் நீட்டினார்கள். இதனிடையே, தொகுப்பாளரும் இசையமைப்பாராளரு மான ஜேம்ஸ் வசந்தன் முயற்சியில் தாமரை செல்வியின் குடும்பத்திற்கு வீடு ஒன்று அமைய இருக்கிறது. பலரின் உதவியோடு தாமரை குடும்பத்திற்கு இருக்கிறது. வீட்டை விரைவில் கட்டித்தர இருப்பதாக ஜேம்ஸ் வசந்தன் தனது யூடுயூப் பக்கத்தில் வீடியோ ஒன்றைவெளியிட்டார்.

bigg boss thamarai selvi - updatenews360

தற்போது தாமரையின் முதல் கணவரின் மகன் பல வருடங்களுக்கு பிறகு தாமரையை சந்தித்துள்ளாராம். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் தாமரை வெளியிட்டுள்ளார்.

bb thamarai -updatenews360

பல வருடங்கள் கழித்து தன்னுடைய மகனுடன் இணைந்த தாமரைக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து பாராட்டி வருகின்றனர்.

https://www.youtube.com/watch?v=GC1pbiOC0Fg
  • vijay famous dialogue what bro spoke by ajith in good bad ugly movie “வாட் ப்ரோ? இட்ஸ் வெரி ராங் ப்ரோ”… விஜய்யின் வசனத்தை பேசி சீண்டிப்பார்க்கும் அஜித்?