Double meaning சர்ச்சை..! எல்லை மீறும் பிக்பாஸ் போட்டியாளர்கள்..! எச்சரிக்க தயங்கும் கமல்..!

Author: Rajesh
17 February 2022, 1:08 pm

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி, ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து போட்டியாளர்களுக்குள் ஏகப்பட்ட காரசாரமான சண்டைகளும், விவாதங்களும் ரசிகர்களை பூர்த்தி செய்து வருகிறது.

இரண்டாவது டாஸ்க்கின் போது, காண்டம் பற்றி விவாதித்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்த நிகழ்ச்சியை சிறியவர்கள் முதல் பெரியர்கள் வரை பார்த்து வருகின்றனர். அதனால் இதைப் பற்றி பேச வேண்டாம் என்று வனிதா கேட்டுக்கொண்டதை அடுத்து போட்டியாளர்கள் இந்த விவாதத்தை நிறுத்திக் கொண்டனர்.

இதற்கு முன்னால் நடத்தப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியை விட நிகழ்ச்சியை விட பிக் பாஸ் அல்டிமேட்டில் போட்டியாளர்கள், எல்லை மீறி நடந்துகொள்வதாகவே இருக்கிறது.
இதனிடையே தற்போது, கொடுக்கப்பட்ட ஒரு டாஸ்க்கில், ஆசிரியாக அனிதா இருக்கிறார். மாணவராக இருக்கும் நிரூப் காதல் கடிதம் எழுதி கொடுக்க, அதனை அனிதா ஏற்க மறுக்கிறார். பின்னர் பாலாவிடம் ‘இவன் இருக்கிற உயரத்திற்கு எனக்கு லவ் லெட்டர் கொடுக்கிறான்’ என்று அனிதா முறையிடுகிறார். அதற்கு பாலா, ‘அவன் உங்க உயரத்துக்கு முழங்கால் போட்டுக்கொள்வான்’ என்ற பேசிய இரட்டை அர்த்தங்கள் பார்வையாளர்களை முகம் சுழிக்க வைத்தது.

இவ்வாறு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் காமெடி என்ற பெயரில் போட்டியாளர்கள் அடிக்கும் அர்த்தமற்ற பேச்சுக்கள் பலரின் மனதிலும் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த நிகழ்ச்சியில் கமல் இரட்டை அர்த்தத்தில் பேசுவதை கண்டிக்காமல் இருப்பது பலரையும் அதிர்ச்சியடைச் செய்துள்ளது.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!