ஏற்றமில்லாத Bigg Boss Ultimate நிகழ்ச்சி..! தப்பித்த கமல்.. மாட்டிய சிம்பு..?

Author: Rajesh
22 February 2022, 7:13 pm

பிக்பாஸ் நிகழ்ச்சி கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி ஹாட்ஸ்டார் இல் கடந்த சில வாரங்களாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.

கமலஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். இதனால் கால்ஷீட் பிரச்சனையால் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து விலகிக்கொள்வதாக கடந்த   கமலஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என பெரிய கேள்வி எழுந்தது. பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஒளிபரப்பான போது கமலஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அந்த வார நிகழ்ச்சியை நடிகை ரம்யாகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.

இதனால் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை ரம்யா கிருஷ்ணன் தான் தொகுத்து வழங்குவார் என்ற செய்தி இணையத்தில் வெளியானது. ஆனால் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை நடிகர் சிம்பு தொகுத்து வழங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கமலஹாசன் இடத்தை சிம்பு பூர்த்தி செய்கிறாரா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.  

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?