சுவாரஸ்யம் இல்லாத பிக்பாஸ் அல்டிமேட்..! விலகும் முடிவில் கமல்..?

Author: Rajesh
20 February 2022, 11:07 am

கடந்த ஐந்து வருடமாக பிக் பாஸ் ஷோவை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் OTTயில் 24 நேரமும் ஒளிபரப்பும் வகையில் பிக் பாஸ் அல்டிமேட் என்ற ஷோ தொடங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியையும் கமல் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னால் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற போட்டியாளர்கள் தான் பங்கேற்றுள்ளனர். அதே பார்;த்து பார்த்து சலித்துப் போன முகங்கள், அதே நடிப்பில், அதே அழுகை இதனால் பார்வையாளர்களை சற்று சலிப்படையச் செய்துள்ளதாகவே தெரிகிறது. ஆனால் கூடுதலாக டபுள் மீனிங் பேச்சுக்கள் அதிகம் இருப்பதால் பார்வையாளர்களை அதிகமாக முகம் சுழிக்க வைத்துள்ளது. இந்த ஷோவில் போட்டியாளர்கள் சுவாரஸ்யமாக விளையாடவில்லை என நெட்டிசன்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது கமல் இந்த வாரத்துடன் பிக்பாஸ் அல்டிமேட் ஷோவில் இருந்து வெளியேறுகிறார் என தகவல் பரவி வரகிறது. இதனால் ரசிகர்கள் சற்று அதிர்ச்சியில் இருக்கின்றனர். இந்த நிலையில், பிக் பாஸ் 5ல் சில எபிசோடுகள் மட்டும் வந்த ரம்யா கிருஷ்ணன் அல்டிமேட் ஷோவுக்கும் வருவாரோ என்கிற கேள்வி எழுந்து இருக்கிறது.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?