பிக் பாஸ் நிகழ்ச்சி – மாதத்திற்கு சிம்பு வாங்க போகும் சம்பளம் இவ்வளவு கோடியா..? ஆச்சிரியத்தில் நெட்டிசன்கள்..!

Author: Rajesh
26 February 2022, 5:07 pm

கடந்த ஐந்து வருடமாக பிக் பாஸ் ஷோவை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். அந்த நிகழ்ச்சி பெரும் வரவேற்பு பெற்றதை அடுத்து, தற்போது ழுவுவுயில் 24 நேரமும் ஒளிபரப்பும் வகையில் பிக் பாஸ் அல்டிமேட் என்ற ஷோ தொடங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் முன்னால் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற போட்டியாளர்கள் தான் பங்கேற்றுள்ளனர். அதே பார்;த்து பார்த்து சலித்துப் போன முகங்கள் அதே நடிப்பில், அதே அழுகை இதனால் பார்வையாளர்களை சற்று சலிப்படையச் செய்துள்ளதாகவே பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, தீடீரென பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தற்போது தான், விலகுவதாக கமல் ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனை தொடர்ந்து பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு யார் அடுத்து தொகுப்பாளர் என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது.

இதன்பின், கமல் ஹாசனுக்கு பதில் நடிகர் சிம்பு தான், இனி பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று அறிவித்திருந்தனர். அதற்கான புரோமா நிகழ்ச்சியில் செம கெத்தாக வலம் வந்தார் சிம்பு.

இந்த நிலையில், தற்போது அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு அவர் வாங்க போகும் சம்பளம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் சிம்பு பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை நடத்த ஒரு நாளைக்கு ரூ. 1 கோடி சம்பளமாக வாங்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனை கேட்ட நெட்டிசன்கள் வாய்பிளந்துள்ளனர்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!