ஜனநாயகம் தோற்று பணநாயகம் வெற்றி பெற்றது.. வன்மத்தை கக்கிய வனிதா..!

Author: Vignesh
18 January 2024, 8:51 am

பிக்பாஸ் 7 டைட்டில் வின்னர் வெற்றிகரமாக முடிவடைந்தது. 23 போட்டியாளர்களை கொண்டு துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக விஜே அர்ச்சனா அறிவிக்கப்பட்டார். அர்ச்சனா வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டில் நுழைந்து ஆரம்பத்தில் இருந்தே மக்களின் மனதை கவர்ந்து பெருவாரியான ரசிகர்கள் கூட்டத்தை பெற்றார் அர்ச்சனா.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வென்றுள்ள அர்ச்சனாவுக்கு ரூ. 50 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. அத்துடன் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள ஒரு பிளாட் மற்றும் ரூ. 15 லட்சம் மதிப்பு ஒரு கார் பரிசாக வழங்கப்பட்டது. பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நாள் ஒன்றிற்கு ரூ. ரூ. 20 ஆயிரம் சம்பளம் வாங்கிய அர்ச்சனா 77 நாட்கள் வீட்டிற்குள் இருந்துள்ள அர்ச்சனாவிற்கு ரூ. 15 லட்சத்து 40 ஆயிரம் சம்பளமாக வாங்கியுள்ளார்.

அர்ச்சனா தான் டைட்டில் வின்னர் ஆகவேண்டும் என பெரும்பாலான மக்கள் எதிர்பார்த்தனர். அதே போன்றே அவர் டைட்டில் வென்றுள்ளதை நினைத்து ஆடியன்ஸ் எல்லோரும் ஹேப்பி ஆகிவிட்டனர். இந்நிலையில் அர்ச்சனாவுக்கு சினிமாவில் நல்ல எதிர்காலம் உண்டு என்றும் அவருக்கு படவாய்ப்புகள் கிடைத்து விரைவில் ஹீரோயின் ஆகிடுவார் என்றும் அனைவரும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், டைட்டில் வின்னராக அர்ச்சனா தேர்வு செய்யப்பட்டாலும், இதற்கான ஆதரவுகள் ஒரு பக்கம் வந்தாலும், சர்ச்சைகளும் சரமாரியாக எழுந்து தான் வருகிறது. அந்த வகையில், பிரபல நடிகையும் பிக்பாஸ் விமர்சகருமான வனிதா அர்ச்சனா அவருக்கு டைட்டில் வின்னர் பட்டம் கிடைக்கும் என நான் நினைக்கவில்லை. மாறாக அதனை என்னால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை என கொந்தளித்து பேசி இருக்கிறார். இப்படி ஒரு நிலையில், தான் டைட்டில் வின்னர் பட்டத்தை அர்ச்சனாவுக்கு கொடுக்கக் கூடாது அவர் புகை பிடிக்கிறார் என்றெல்லாம் சமூக வலைதளங்களில் பலரும் கொந்தளித்து இருந்தனர்.

இவர்களை எல்லாம் தாண்டி மக்கள் அர்ச்சனாவை டைட்டில் வின்னராக தேர்வு செய்திருந்தனர். இதனை பார்த்த வனிதா அர்ச்சனா டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டதை கமல் சாரல் கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மாறாக அதற்கு உள்ளே சண்டைகள் கூட போனது. அத்துடன் மணிக்கு கூட அந்த பட்டத்தை கொடுத்திருக்கலாம். என் மனம் ஆறுதல் அடைந்து இருக்கும். ஆகமொத்தம் ஜனநாயகம் தோற்று பண நாயகம் வெற்றி பெற்றது எனக் கூறியுள்ளார். இந்த செய்தி பிக் பாஸ் ரசிகர்களிடையே குழப்பம் அடைய வைத்துள்ளது.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 295

    0

    0