பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவரும் தங்களது வாழ்க்கையில் ஏற்பட்ட மோசமான சம்பவம் குறித்து மனம் திறந்து பேசினார்கள். இதில், நடிகை விசித்ரா தனக்கு ஏற்பட்ட கொடுமை குறித்து மனம் உறுகி பேசினார். இதில், படப்பிடிப்பின் போது படத்தின் ஹீரோ என்னை அவருடைய ரூமுக்கு வரச் சொல்லி தவறான முறையில் அழைத்தார்.
நான் போகவில்லை, அதன் பின்னர் என்னை பலரும் டார்கெட் செய்து தவறான முறையில் நடக்க முயற்சி செய்தனர். என்னை ஒருவர் தவறான முறையில் தடவினார். தெரியாமல் செய்திருப்பார் என முதல் முறை நான் விட்டுவிட்டேன். அதன் பின்னர் மீண்டும் மீண்டும் அதே தவறை செய்தார். நான் என்னை தொட வந்த கையை இறுதியில் பிடித்து விட்டேன். உடனடியாக அவரை அழைத்துக்கொண்டு படத்தின் ஸ்டண்ட் மாஸ்டரிடம் சென்று எனக்கு நடந்ததை புகார் கொடுத்ததும், யாரும் எனக்கு உதவவில்லை சங்கத்தலைவரும் இதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை என கண்கலங்கி பேசினார்.
இதனிடையே, நடிகை விசித்ராவை ரூமுக்கு வா என அழைத்து, இப்படியொரு கொடுமை நடக்க காரணமாக இருந்த அந்த நடிகர் பாலகிருஷ்ணா என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். கதையில் விசித்ரா கூறிய விஷயங்களும், பாலகிருஷ்ணாவின் இப்படத்தின் காட்சிகளும் ஒரே மாதிரியாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டு வருகிறார்கள்.
விசித்ரா இந்த சம்பவத்தை கூறும்போது தன்னை தவறாக அழைத்து டாப் நடிகர் என்று விசித்ரா குறிப்பிட்டு இருந்தார். இதனால் அனைத்து விஷயங்களும் பாலகிருஷ்ணாவுடன் ஒத்துப்போவதாக கூறி ரசிகர்கள் இந்த வீடியோவை வைரலாக்கி வந்தனர்.
இந்நிலையில், நடிகை விசித்ரா குறித்த சில செய்திகளை ரசிகர்கள் மீண்டும் தோண்டி எடுத்துள்ளனர். அதாவது, முன்னதாக சத்யராஜ் தான் விசித்ராவின் வாழ்க்கையை அழிச்சதே, திரை வாழ்க்கையின் வீழ்ச்சிக்கு காரணம் என கடந்த 2019ம் ஆண்டு மண்டகசாயம் என்ற டுவிட்டர் பக்கத்தில், சில வருடங்களுக்கு முன்பு ஒருவர் போட்டிருந்த பதிவில் தமிழ் முன்னணி கதாநாயகியாக வந்திருக்க வேண்டியவர் விசித்திரா. சத்தியராஜ் ஆல் தான் அனைத்தும் பாலாகிவிட்டது என்பது போல் பதிவிடப்பட்டு இருந்தது.
இதற்கு தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ரிப்ளை செய்த விசித்திரா அந்த காலகட்டத்தில் தனக்கு ஒரே மாதிரியான கதாபாத்திரம் மட்டுமே கிடைத்ததாகவும், அதனால் மற்ற வேடங்களில் தன்னால் நடிக்க முடியாமல் போனது. சத்யராஜ் சார் என்மேல் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். அவர் இயக்கிய முதல் படமான வில்லாதி வில்லன் படத்தில் எனக்கு ஒரு நல்ல கதாபாத்திரத்தை கொடுத்தார் எனக் கூறி பதிலடி கொடுத்திருந்தார். இவருடைய இந்த பழைய பதிவு தற்போது, சமூக வலைதளங்களில் மீண்டும் பகிரப்பட்டு வருகிறது.
வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த கூலி தொழிலாளி ஜாகீர் (50) என்பவர் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 10…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
கோவையில் பல்வேறு கடைகளில் வீட்டிற்கு உள்ளே வளர்க்கும் செடிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த வகை செடிகள் சின்கோனியம் ஸ்நேக் பிளான்ட்…
இந்திய இசையமைப்பாளர்களின் அதிக சம்பளம் வாங்கும் பிரபலமாக இருப்பவர் அனிருத்தான். இவர் இசையமைக்கும் அத்தனை ஆல்பமுமே ஹிட் ஆவதால் தயாரிப்பாளர்கள்…
வித்தியாசமான கதைக்களம் சிவகார்த்திகேயனின் நடிப்பில் மடோன்னே அஸ்வின் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான “மாவீரன்” திரைப்படம் சிவகார்த்திகேயனின்…
பிக் பாஸ் பிரபலம் தர்ஷன் கைது செய்யப்பட்டது சென்னையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நேற்று மாலை ஜிம்மில் இருந்து திரும்பிய…
This website uses cookies.