10 வருஷம் நான் புடவையே கட்டல… வேதனை பகிர்ந்த பிக்பாஸ் விசித்திரா!

Author: Shree
25 October 2023, 11:09 am

90ஸ் காலகட்டத்தில் கவர்ச்சி நடிகையாக சினிமாவில் பெயர் பெற்றவர் நடிகை விசித்ரா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ளார். நகைச்சுவை, குணச்சித்திரம் மற்றும் எதிர்நாயகி உள்ளிட்ட வேடங்களில் இவர் நடித்துள்ளனர்.

குறிப்பாக வில்லி வேடமும் , கவர்ச்சி வேடங்கள் இவருக்கு பக்காவாக பொருந்தும். 10ம் வகுப்பு படிக்கும்போதே திரைத்துறையில் நுழைந்த விசித்ரா அதன் பின்னர் போர்க்கொடி என்ற படத்தில் நடித்து நடிகையாக அறிமுகம் ஆனார். ஆனால், அப்படம் வெளியாகவில்லை. இதையடுத்து ஜாதி மல்லி என்ற திரைப்படத்தில் நடித்தார்.

தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து வந்த விசித்திர கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனால். ஆம் விசித்ராவுடன் கல்வி சர்ச்சையில் சிக்கி பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகினார்.

இந்நிலையில் விசித்திரா பேட்டி ஒன்றில் நான் கடந்த 10 வருடங்களாக புடவையை கட்டவில்லை என கூறியிருக்கிறார். 10 வருஷமாக வெறும் நைட்டி மட்டுமே அணிந்திருந்தேன். காரணம் எனக்கு 3 பிள்ளைகள் என்பதால் சினிமாவாவில் இருந்து பிரேக் எடுத்துவிட்டேன்.

அவர்களுடனே முழு நேரமும் 10 வருஷம் இருந்தேன். முழுக்க முழுக்க அவர்களை கவனமாக பார்த்து வளர்த்தேன். நான் 10 வருஷம் புடவை கூட காட்டவில்லை. எங்கேயாவது செல்லவேண்டும் என்றால் பிள்ளைகளுக்கு வசதியாக இருக்கும் வகையில் நான் சல்வார் அணிந்து செல்வன். இப்படிதான் என் வாழ்க்கை ஓடியது என விசித்திரா கவலையுடன் கூறினார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!