மூணு சீரியலுக்கு முடிவு கட்டியாச்சு… கமலை திட்டி தீர்க்கும் சீரியல் வாசிகள்..!

Author: Vignesh
29 August 2023, 7:00 pm

வீட்டில் உள்ள இல்லத்தரசிகளை கட்டிப்போட்டு வைத்துள்ளது மெகா சீரியல்கள். காலையில் ஆரம்பித்த சீரியல்கள் இரவு 11 மணி வரை நீடித்துக் கொண்டே இருக்கிறது

அதுவும் சீரியலுக்கு பிரபலமான சன் டிவிக்கு போட்டியாக விஜய் டிவி, கலர்ஸ், ஜீ டிவி என எல்லா டிவி சேனல்களும் தற்போது சீரியல் என்ற ஆயுதத்தை கையில் எடுத்து டிஆர்பியை எகிற வைத்து வருகின்றன.

vijay tv serial -updatenews360

ஆனால் ஆரம்பத்தில் எப்படி சீரியல்களால் இல்லதரசிகளை கட்டிப்போட்டதோ இன்னும் அப்படியே மாறாமல் உள்ளது சன் டிவி.

சீரியல்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி என்று முன்பெல்லாம் சன் டிவியை தான் கூறுவார்கள். ஆனால் இப்போது அனைத்து தொலைக்காட்சியிலும் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

இந்நிலையில், விஜய் டிவியில் மதியம் மற்றும் மாலை நேரங்களில் வெற்றிகரமான ஒளிபரப்பாகின்றன. இதனிடையே, இளைஞர்களை கவரும் தொடர்கள், வீட்டுப் பெண்கள் பார்ப்பது போல் கதையுள்ள தொடர்கள் என ஒளிபரப்பாகி வருகின்றன.

pandiyan store-updatenews360

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 3 தொடர் முடிவுக்கு வரப்போவதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது மாலை ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ், கண்ணே கலைமானே, காற்றுக்கென்ன வேலி தொடர்கள் விரைவில் முடிவுக்கு வரப்போகிறதாம்.

இதைக்கேட்ட ரசிகர்கள் நல்லாதானே ஓடிட்டு இருக்கு ஏன் முடிவுக்கு கொண்டு வருகிறீர்கள். சில சீரியல் பிரியர்கள் கமலை திட்டி தீர்த்தும் வருகிறார்கள். எல்லாம் பிக்பாஸ் ஆரம்பிச்ச நேரம் தான் என்று தங்களுடைய ஆதங்கத்தை தெரிவித்து வருகிறார்கள்.

செப்டம்பர் கடைசி வாரம் அல்லது அக்டோபர் இரண்டாவது வாரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கலாம் என்று கூறப்படுகிறது. விஜய் டிவியின் தொகுப்பாளர்கள், சீரியல் நடிகர்கள், அப்பாஸ், சோனியா அகர்வால் என நாம் எதிர்பார்க்காத பல பிரபலங்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும், தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆனால், இதில் எது உண்மையான லிஸ்ட் என்பது தற்போது வரை தெரியவில்லை.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!