100 நாட்கள் ஆட்டி படைத்த கணீர் குரல்… பிக்பாஸுக்கு வாய்ஸ் கொடுத்தது இவர் தான் – தீயாய் பரவும் புகைப்படம்!
Author: Rajesh18 January 2024, 3:52 pm
இந்திய தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றாக பார்க்கப்பட்டு வருவது பிக்பாஸ். பல மொழிகளில் அந்ததந்த மொழிகளின் நட்சத்திர நடிகராக இருக்கும் ஒருவர் இந்த நிகழ்ச்சி தொகுத்து வழங்கி வருகிறார்கள். முதன்முதலில் நெதர்லாந்து நாட்டில் பிக் பிரதர் என்று இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. அதன் சாயலில் தான் இந்தியாவில் இந்த நிகழ்ச்சியானது முதலில் கலர் என்ற தொலைக்காட்சியில் பிக்பாஸ் என்ற பெயரில் ஒளிபரப்பானது.
தற்போது மிகவும் பிரபலமான ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியாக பார்க்கப்பட்டு வருகிறது. தமிழில் இந்நிகழ்ச்சியை நடிகர் கமல் ஹாசன் தொடர்ந்து 7 சீசன்களை தொகுத்து வழங்கி வருகிறார். இதற்காக அவர் ஒவ்வொரு சீசனுக்கு ரூ. 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார். கடைசியாக ஒளிபரப்பான நிகழ்ச்சிக்காக அவர் ரூ. 130 கோடி சம்பளம் வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒலிக்கும் அந்த குரலுக்கு சொந்தக்காரர் யார் என்ற விவரம் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி செம வைரலாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தமிழில் முதல் சீசனில் இருந்து குரல் கொடுத்து வரும் அவரின் பெயர் சதியிஷ் சாரதி சஷோ என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவரின் புகைப்படத்துடன் இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.