வந்தோமா கெக்க பெக்கனு சிரிச்சிட்டு காசு வாங்குனோமானு போகணும்- செருப்படி கொடுத்த ஜனனி!
Author: Shree19 April 2023, 7:52 pm
தமிழ் சினிமாவில் பெரிதாக பிரபலமாகாத நடிகையாக இருந்து பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்ருதிகா.இவர் நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி ஆவார். 2002ஆம் ஆண்டு வெளியான சூர்யாவின் ஸ்ரீ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார். அந்தப்படம் அட்டர் பிளாப் ஆகி பெரிதாக பேசப்படவில்லை.
அடுத்தடுத்து தமிழில் ஆல்பம், நள தமயந்தி, தித்திக்குதே ஆகிய படங்களில் நடித்தார். இதனிடையே ஸ்ருதிகா அர்ஜூன் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். அவருக்கு ஒரு மகன் இருக்கிறார். இதையடுத்து கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று பெருமளவில் பிரபலமானார்.
சில நாட்களுக்கு முன்னர் ஸ்ருதிகா ’கலக்கப்போவது யாரு சாம்பியன் சீசன் 4’ நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அமுதவாணனிடம் என்னது உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா? நீங்க ஜனனியை காதலிக்கிறீர்கள் என்று நினைத்துவிட்டேன் என்று மனதில் நினைத்ததை அப்படியே உளறிவிட்டார்.
இது குறித்து தற்போது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜனனி, சிம்பு போல் மிமிக்கிரி செய்தார். அதில், ‘வந்தோமா பக்கத்துல இருக்கறவங்கள பேசு விடாம கெக்பெக்கனு சிரிச்சிட்டு பேமெண்ட் வாங்கி பேனோம்மானு இல்லாம அமுதவாணன் யார் கூட பேசுனீங்க, ஜனனி ஜனனி லவ் பண்ணீங்களானு கேட்டு, வாய்ப்பு கிடைத்தவுடன் ஸ்ருதியை கிழிச்சுட்டாங்க ஜனனி. உடனே ஸ்ருதி எழுந்து நின்று மன்னிப்பு கேட்டார். இதோ அந்த வீடியோ: https://www.instagram.com/reel/CrNndf2S-4A/?utm_source=ig_embed&utm_campaign=loading