அடுத்த காயத்ரி ரகுராம் இந்தம்மா தான்.. பெண் பயில்வானை தூக்கி TRP ஏத்தபோகும் கமல்..!

Author: Vignesh
31 August 2023, 10:36 am

இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்க உள்ளனர். அதற்கான வேளைகளில் பிக்பாஸ் குழு மும்முரமாக இறங்கியுள்ளது. இந்த முறை யார் யாரெல்லாம் பங்கேற்க உள்ளார்கள் என்பதை கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்கலாம். கடைசியாக முகமது அசீம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் அதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது.

7வது சீசனுக்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனும் மற்ற சீசன்களை போலவே சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் இருக்கவேண்டும் என்பதற்காக பார்த்து பார்த்து போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த சீசனில் பங்கேற்கப்போகும் 18 போட்டியாளர்களின் மொத்த லிஸ்ட் வெளியாகியுள்ளது. அதன்படி யார் யாரெல்லாம் பங்கேற்க போகிறார்கள் என பார்க்கலாம் வாங்க…

  1. அப்பாஸ்
  2. சோனியா அகர்வால்
  3. ரஞ்சித் – பாலிமர் செய்தியாளர்
  4. சந்தோஷ் பிரதாப்
  5. தர்ஷா குப்தா
  6. விஜே பார்வதி
  7. ரேகா நாயர்
  8. அம்மு அபிராமி
  9. விஜே ரக்‌ஷன்
  10. ஜாக்குலின்
  11. ஷர்மிளா – பஸ் டிரைவர்
  12. பப்லு
  13. காக்கா முட்டை விக்னேஷ்
  14. கல்லூரி அகில்
  15. நிலா – மாடல்
  16. தினேஷ் – ரச்சிதா கணவர்
  17. ஸ்ரீதர் மாஸ்டர்
  18. ரவிக்குமார் – மாடல்
  19. ஷகீலா
sakila-updatenews360

இந்த முறை சர்ச்சைக்கும் , கவர்ச்சிக்கும் குறைவிருக்காத வகையில் நிகழ்ச்சி கொண்டுச்செல்ல திட்டமிட்டுள்ளார்களாம். குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் அனைவரையும் கவர்ந்த நடிகை ஷகிலா தான் பிக் பாஸ் போட்டியில் கலந்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. தற்போது, இணையதளத்தில் சரமாரியாக பேசிய வீடியோக்கள் மூலம் அதிரவைத்து வருவதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடுத்த காயத்ரி ரகுராமாக திகழ்வாறோ என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 332

    0

    0