நெசமாவே இது பிக்பாஸ் சக்தியா.. -அடக்கொடுமையே, 52 வயது நடிகையுடன் எடுத்த புகைப்படம் வைரல்..!
Author: Vignesh17 June 2023, 12:15 pm
பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் சக்தி வாசுதேவன். இவர் இயக்குனர் பி வாசுவின் மகன். தொட்டால் பூ மலரும், நினைத்தாலே இனிக்கும், ஏதோ செய்தாய் நீ போன்ற ஒரு சில படங்களில் நடித்து வந்தார்.
சிவலிங்கா படத்தில் ரஹீம் கதாபாத்திரத்தில் நடித்த சக்தி பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பல்வேறு சர்ச்சைகளை வாரிக்குவித்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு பின் பட வாய்ப்பு வரும் என்று எதிர்பார்த்த நிலையில், சக்திக்கு மிஞ்சியது ஏமாற்றமே. இதனால் மனரீதியாக கஷ்டப்பட்டதாகவும், சக்தி பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
தற்போது நடிகை குஷ்பு உடன் சக்தி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தில் இருப்பது சக்தியா என்று ரசிகர்கள் பெரிய ஷாக்கிங் ரியாக்சன் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.