விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, 7வது சீசன் பரபரப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது.
இதனிடையே, முதல் நாளில் இருந்தே பிக் பாஸில் நிறைய டாஸ்க் கொடுத்து போட்டியாளர்களை வறுத்தெடுத்து வருகிறார்கள். இந்த சீசன் விறுவிறுப்பின் உச்சமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, முன்பு எப்போதும் இல்லாத வகையில் சண்டை சச்சரவு பிரச்சனைகள் எல்லாம் இந்த சீசனில் எல்லை மீறி தான் சென்று கொண்டிருக்கிறது.
அதன் பின்னர் மேடை பேச்சாளரான கோவில்பட்டி அன்னபாரதி, ரேடியோ ஜாக்கி பிராவொ, சின்னத்திரை நாயகி ரக்ஷித்தாவின் முன்னாள் கணவர் தினேஷ் உள்ளிட்டோர் பிக்பாஸ் போட்டியில் வைல்டு கார்டு மூலம் நுழைந்துள்ளார்.
இந்த சீசனில் வெகு சீக்கிரத்தில் போட்டியாளர்களுக்கிடையே போட்டியும், மோதலும் உருவாகிவிட்டது. இதில் அனன்யா பாண்டே எலிமினேட் செய்யப்பட்டார். பவா செல்லத்துரை போட்டியில் இருந்து விலகிவிட்டார். அவரைத் தொடர்ந்து விஜய், யுகேந்திரன் , வினுஷா, அன்னபாரதி ஆகோயோர் எலிமினேட் செய்யப்பட்டார்.
இந்நிலையில், கடந்த வாரம் பிக் பாஸ் சீசன் 2 கார்ட் மூலமாக பிரதிப் வெளியேற்றப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் பெரும் விவாத பொருளாக மாறி உள்ளது. நிக்சன் ஐஷுவிடம் கண்ணாடி மூலமாக முத்தம் கொடுத்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், ஐஷு அணிந்திருந்த வேஷ்டியை நிக்சன் சரி செய்த அந்த சமயத்தில் கொஞ்சம் வேஷ்டியை மேலே தூக்க உடனே ஐஷு கத்தினார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல கமெண்ட்கள் வந்த வண்ணம் உள்ளன. இதற்கிடையில் ஐஷு மற்றும் நிக்ஷன் ரொமான்ஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை கடுமையாக நெட்டிசன்கள் விமர்சித்து வரும் நிலையில், ஐஷுவின் அம்மா ஷைஜி அவரது சமுகவலைத்தள பக்கத்தில் ஐஷு குறித்து எமோஷ்னலாக ஒரு பதிவிவை பகிர்ந்து உள்ளார். அதில், எல்லாத்தையும் உணர்ந்து நீ நீயாகவே இரு ஐஷு. இந்த ஐஷு எனக்கு வேண்டாம் எனவும், நாங்கள் எங்களுடைய ஐஷுவை தான் பார்க்க விரும்புகிறோமெ என்று பகிர்ந்து இருக்கிறார். இதற்கு நெட்டிசன்கள் பலர் அதை முதலில் செய்ய நிக்ஷன் விடமாட்டான் என்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மெட்டாலா பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற மெட்டாலா ஆஞ்சநேயர் கோவிலானது அமைந்துள்ளது. கோவிலில் இன்று…
நடிகை அமலாபால் மைனா படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. தொடர்ந்து விஜய்,…
டாப் நடிகர் பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆமிர்கான். இவர் தொடக்கத்தில் குழந்தை நட்சத்திரமாகவும் உதவி இயக்குனராகவும் தனது…
எம்புரானுக்கு வந்த வம்புகள் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியான “L2 எம்புரான்”…
தற்போதைய கால சூழலில் சிறு வயதினருக்கும் மாரடைப்பு ஏற்படுவது சகஜமாக மாறி வருகிறது. இதனால் இளைஞர்கள் பலர் வெளியில் சென்றிருக்கும்…
பிக்பாஸ் தர்ஷன் திடீர் கைது… பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே மிகப் பிரபலமாக அறியப்பட்டவர் தர்ஷன். இலங்கையை…
This website uses cookies.