தமன்னா ஆட்டத்தை அப்படியே காலி செஞ்சிட்டியே.. – பிக்பாஸ் பிரபலம் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ..!
Author: Vignesh21 July 2023, 2:15 pm
தமிழ் திரையுலகை பொருத்தவரை நடிகரை தலைவர் இடத்தில் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு மக்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான். 80ஸ்களில் தொடங்கி தற்போது வரை சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் அவர்கள், பாட்ஷா, படையப்பா, அண்ணாமலை என தனது ஸ்டைல் மூலம் மக்கள் மனங்களை வென்றவர்.
70 வயது ஆன போதிலும் தனது ஸ்டைல், குணம் என எதுவும் மாறாது இன்னும் அதே சூப்பர்ஸ்டார் அந்தஸ்தில் இருக்கிறார். எவ்வளவு பேவரைட் நடிகர்கள் வந்தாலும் இவருக்கான தனி இடத்தை ரசிகர்கள் மாற்றுவதே இல்லை. முக்கியமாக திறமை இருந்தும் வாய்ப்பில்லாமல் தவித்து வந்த பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் போன்றோருக்கு ரஜினிகாந்தின் படங்கள் திருப்புமுனையை ஏற்படுத்தி தந்தது.
பீஸ்ட் படத்தின் மூலம் நெகட்டிவ் ரிவியூஸ் பெற்ற நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் நடிக்கும் திரைப்படம் ஜெயிலர். இத்திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. அண்மையில் இப்படத்தின் காவாலா என்ற பர்ஸ்ட் சிங்கிள் பாடல் ரிலீஸ் ஆனது. இதில் தமன்னாவின் நடனம் அனைவரையும் கவர்ந்தது.
இந்நிலையில், பிக் பாஸ் மூலம் பிரபலமடைந்த தனலட்சுமி ஒரு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், காவாலா பாடலுக்கு தமன்னாவைப் போல் ஆட்டம் போட்டு வீடியோ வெளியிட்டதை பார்த்த நெட்டிஷன்கள் தமன்னாவின் ஆட்டத்தை அப்படியே காலி செஞ்சிட்டியேமா என்று கலாய்த்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.