துணிவு படத்துல Ajith Sir கூட நடிக்கிறேன், ஆனா.. ஜி பி முத்து வெளியிட்ட வேறலெவல் அப்டேட்..!

Author: Vignesh
23 December 2022, 8:00 pm

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் குமார் தனது 61வது திரைப்படமான ‘துணிவு’படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் நிறைவு பெற்றுவிட்டது.

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, பாவனி உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.

Ajith - Updatenews360

இத்திரைப்படம் வரும் 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு திரை அரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தின் தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படத்துடன், துணிவு படம் போட்டி போடுவதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ajith and vijay - updatenews360

இந்நிலையில், துணிவு படத்தில் இருந்து ஏற்கனவே ‘சில்லா சில்லா’ என முதல் பாடல் வெளிவந்தது. அதை தொடர்ந்து நேற்று துணிவு படத்திலிருந்து ‘காசேதான் கடவுளடா’ எனும் பாடல் வெளிவந்தது.

இரண்டு பாடலும் ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ள நிலையில், Youtube ட்ரெண்டிங்கில் இரண்டு பாடல்களும் முதல் இரண்டு இடத்தை பிடித்துள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

GPmuthu-Updatenews360-6

இந்நிலையில் துணிவு படத்தில் யூடியூப் பிரபலம் ஜி.பி. முத்து நடித்துள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. துணிவு படத்தில் ஏற்கனவே மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், சமுத்திரக்கனி, பிரேம், ஜி. எம். சுந்தர், வீரா, அமீர், பாவனி, பக்ஸ், மகாநதி சங்கர் ஆகியோர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ajith - updatenews360.jpg 1

இதுதவிர ஏராளமான யூடியூபர்களும் இதில் நடித்துள்ளதாக அவர் கூறி உள்ளார். டிக்டாக் மற்றும் யூடியூப்பில் வீடியோ போட்டு வந்த ஜிபி முத்து தற்போது அஜித்துடன் நடித்துள்ள தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது.

  • again ajith join with adhik ravichandran in ak 64AK 64- திரும்பவும் ஆதிக் ரவிச்சந்திரனோடயா? குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற்ற Hint!
  • Close menu