அஜித் படத்தில் இணையவுள்ள பிரபல நடிகர் : வெளியான புதிய அப்டேட் ..!

Author: Rajesh
31 March 2022, 4:03 pm

ஹெச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் மூன்றாவது முறையாக தனது 61வது படத்தில் இணைகிறார். ஏற்கனவே இந்த கூட்டணியில் தற்போது ‘வலிமை’ படம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது. ‘மங்காத்தா’, ‘பில்லா’ படங்களை போன்று அஜித்தின் இந்த 61வது படத்தின் கதையிலும் நெகட்டிவ் கதாப்பாத்திரமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. இதற்காக ஹைதராபாத்தில் பிரம்மாண்டமான செட் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. நீண்ட வருடங்கள் கழித்து நடிகை தபு அஜித்துடன் இணைந்து நடிக்க இருப்பதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் நடிகர் கவினும் அஜித்துடன் இந்த படத்தில் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. நடிகர் கவின் தற்போது’ஊர்க்குருவி’ நடித்துள்ளார். இது தவிர ‘பீஸ்ட்’ படத்தில் இயக்குநர் நெல்சனுடன் இணைந்து இயக்குநர் குழுவில் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்