அப்போ Bro.. இனி புருஷன்?…. அவருடன் ஊர் சுற்றும் லாஸ்லியாவிற்கு குவியும் நெகட்டிவ் கமெண்ட்ஸ்..!

Author: Vignesh
18 September 2023, 11:51 am

இலங்கையைச் சேர்ந்த தமிழ் செய்தி வாசிப்பாளினியான லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் கலந்துகொண்டு தமிழ் மக்களுக்கு பிரபலமானார். புஷ் புஷ் அழகியாக கொழுக் மொழுக் உடல் தோற்றத்தில் கியூட்டாக வந்து இறங்கிய லாஸ்லியாவுக்கு வெகு சில நாட்களிலேயே ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகிவிட்டார்.

பிக்பாஸில் லாஸ்லியா ஆர்மிஸ் தான் அவரின் அழகான வீடியோவுக்கு ரொமான்டிக் பாடல் போடுவது, அவரது கியூட்டான பேச்சினை ரசித்து வீடியோ ஷேர் செய்வது, அவரது ஹோம்லி அழகை உட்கார்ந்து ஒரு மணி நேரம் பார்த்து ரசிப்பது என வளர்த்துவிட்டார்கள்.

அந்த நிகழ்ச்சியில் கவினுடன் காதல் வயப்பட்ட லாஸ்லியா வெளியில் வந்ததும் அவரை கழட்டிவிட்டுவிட்டார். தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க ப்ரண்ட்ஷிப் படத்தில் நடித்தார். பின்னர் உடல் எடை குறைத்து சிக்கென மாட்டார் லுக்கிற்கு மாறிவிட்டார்.

losliya mariyanesan - updatenews360

இந்நிலையில், கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் கூகுள் குட்டப்பா என்ற படத்தில் பிக் பாஸ் மூலம் பிரபலமான தர்ஷன் உடன் ஜோடியாக லாஸ்லியா நடித்திருந்தார். இதற்கு பல்வேறு ரசிகர்களும் ஒரு அண்ணன் கூட போய் படுக்கையறை காட்சி நடிக்கலாமா என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு பல்வேறு சர்ச்சைகளை எழுப்பினர்.

losliya mariyanesan - updatenews360.png 2

இந்நிலையில், பட வாய்ப்புகள் ஏதும் இல்லாத காரணத்தால் கவர்ச்சி காட்டி சில புகைப்படங்களையும், இணையதளத்தில் வெளியிட்டு வந்தார் லாஸ்லியா. இதனிடையே, தற்போது தர்ஷன் உடன் இணைந்து வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், தர்ஷனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தும், அவருடன் நடனமாடி ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டு இருக்கும் வீடியோவை வெளியிட்டு உள்ளார். இதற்கு நெட்டிசன்கள், அப்போ அண்ணன், இப்போ நண்பன், அடுத்து கணவர் என்று இதற்கு பலரும் நெகட்டிவ் கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ