என்ன வேணா நடக்கட்டும் நா சந்தோஷமா இருப்பேன்.. தெருவில் தர லோக்கல் குத்து டான்ஸ் போட்ட பிக் பாஸ் பிரபலம்..!(வீடியோ)

Author: Vignesh
24 January 2024, 10:37 am

பிக்பாஸ் 7 டைட்டில் வின்னர் வெற்றிகரமாக முடிவடைந்தது. 23 போட்டியாளர்களை கொண்டு துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக விஜே அர்ச்சனா அறிவிக்கப்பட்டார். அர்ச்சனா வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டில் நுழைந்து ஆரமபத்தில் இருந்தே மக்களின் மனதை கவர்ந்து பெருவாரியான ரசிகர்கள் கூட்டத்தை பெற்றார் அர்ச்சனா.

இந்நிலையில், மூன்றாம் இடத்தை பிடித்த மாயா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோப்பை மணி கொடுத்து வாங்கப்பட்டது. ஆனால், காசு கொடுத்து மக்கள் அன்பை வாங்க முடியாது என்று தெரிவித்து இருந்தார்.

bigg boss 7 tamil-updatenews360

அதற்கு, பலரும் மாயாவை கண்டபடி திட்டி கமெண்ட் செய்து வந்த நிலையில், நிகழ்ச்சி முடிந்ததும் போட்டியாளர்கள் தங்கள் குடும்பத்துடனும் நண்பர்களுடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். சிலர் அதே வன்மத்துடன் இன்றும், சமூக வலைதளங்களில் ஒருவரை ஒருவர் திட்டி பதிவிட்டு வருகின்றனர். சிலர் அவுட்டிங் சென்று பேட்டியளித்தும் வருகிறார்கள். இந்நிலையில், மாயா மற்றும் பூர்ணிமா போன்றவர்கள் ஒரு இடத்திற்கு சென்று நடுரோட்டில் குத்தாட்டம் போட்டுள்ளனர். அவர்களின் குத்தாட்டம் போட்ட வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் பலரும் கலாய்த்தபடி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 329

    0

    0