என் தங்கச்சி லெஸ்பியன்?.. உண்மையை உடைத்த மாயா அக்கா ஸ்வாகதா..!
Author: Vignesh14 November 2023, 11:15 am
இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் மாயா S கிருஷ்ணன் என்ற போல்டான நடிகை போட்டியாளராக கலந்துக்கொண்டிருக்கிறார். அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள அவர் யார் என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
நிறைய குறும்படங்களில் தனது போல்டான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தார். இவர் 2015 ஆம் ஆண்டு வெளியான “வானவில் வாழ்க்கை” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் 2018 ஆம் ஆண்டு ரஜினியின் 2.o திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். அதன் பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து உலக நாயகன் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தில் ஒரு விலை மாதுவாக நடித்தார். அந்த ரோல் ரசிகர்களின் கவனத்தை பெரிய அளவில் ஈர்த்தது.
தற்போது தளபதி விஜய்யின் லியோ திரைப்படத்திலும் இவர் ஒரு நல்ல கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். மேலும், விரைவில் வெளியாக உள்ள நடிகர் விக்ரமின் துருவ நட்சத்திரம் திரைப்படத்திலும் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார்.
இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் மாயா மற்றும் பூர்ணிமா இருவரும் இணைந்து நடந்து கொள்ளும் விதம் பலரின் வெறுப்பை சம்பாதித்து வருகிறது. அதைவிட மாயா ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்று பாடகி சுசித்ரா கூறியது பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், பிரபல திருநங்கை மற்றும் தொகுப்பாளியான வைஷு மாயாவை பற்றி உண்மைகளை பகிர்ந்து இருந்தார்.
இந்நிலையில் மாயாவின் அக்கா ஸ்வாரகா இனையத்தில் ஒரு விசயத்தை பகிர்ந்து எச்சரித்திருக்கிறார். மாயாவின் செயல்களை தவறாக சித்தரித்து பேசிய சுசித்ராவின் மீது சட்டப்படி குடும்பத்தினர் நடவடிக்கை எடுக்க போவதாகவும் மாயாவுக்காக குரல் கொடுத்தவர்களுக்கு நன்றி என்றும் தெரிவித்திருக்கிறார். இதற்கு ஸ்வாரகா மாயா ஓரினச்சேர்க்கையாளர் என்பதை மறுக்கிறாரா? அல்லது ஓரினச்சேர்க்கையாளர் தான், ஆனால் அந்த வாழ்க்கையை சட்டத்திற்கு எதிரான விசயம் போல் பேசுவதை தண்டிக்கிறாரா என்ற கேள்விகளை நெட்டிசன்கள் முன் வைத்து வருகிறார்கள்.