பிக்பாஸில் கலந்து கொண்டுள்ள ஆயிஷா பற்றிய உண்மைகளை அவரது முன்னாள் காதலர் தேவ் என்பவர் கூறியுள்ளார். ஏற்கனவே இரண்டு கணவர்களுடன் திருமணமாகிய நிலையில் தன்னை மூன்றாவதாக காதலித்து ஏமாற்றியதாக அவர் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். கேரளாவைச் சேர்ந்தவர் ஆயிஷா. இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கேட்டரிங் கல்லூரியில் படித்து வந்தார்.
அப்போது உதவி இயக்குனர் தேவ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் தேவ்வின் முயற்சியால் ஆயிஷாவுக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான பொன்மகள் வந்தாள் என்னும் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் டிக்டாக் செய்து வந்த ஆயிஷா இந்த சீரியல் மூலமாக திரைத்துறையில் அறிமுகமானார் ஆயிஷா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சில நாட்களிலேயே ஆயிஷாவுக்கும், அந்த சீரியலின் இயக்குனருக்கும் கடுமையான மோதல் ஏற்பட சீரியலை விட்டு விலகினார். பின்னர் மாயா என்ற சன் தொலைக்காட்சியில் நடித்தார். இது இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. பின்னர் ஜீ தமிழில் ஒளிபரப்பான சத்யா சீரியலில் இரண்டு பாகங்களிலும் ரவுடி பேபியாக நடித்தார். இதன் பின்னர் இவர் தமிழகமெங்கும் அறியப்பட்ட ஒரு முகமாக மாறினார். ஆயிஷாவை தெரியாதவர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பிரபலமானார்.
இதனால் பிக்பாஸ் சீசன் 6ல் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இதில் ஆரம்பம் முதலே பல சர்ச்சைகளை கிளப்பும் போட்டியாளராக இருந்து வருகிறார் ஆயிஷா. நேற்று கூட கமலைப் பார்த்து என்னை தவறாக சித்தரிக்காதீர்கள் என்று அவர் பேசியது கடுமையான சர்ச்சையை கிளப்பியது.
இந்த நிலையில் கதை சொல்லும் போட்டியில் எந்த கதையும் சொல்லாமல் இருந்த ஆயிஷா, தன்னைப்பற்றி எந்த கதையும் வெளியே தெரியக்கூடாது என்று நினைத்து கதை சொல்லாமல் தவிர்த்து வந்தார். ஆனால் ஒரு இடத்தில் பேசும் போது தன்னை டிக்டாக்கில் அத்துமீறி உடைகள் அணிய சிலர் கட்டாயப்படுத்தினார்கள் என்று தனது முன்னாள் காதலனை குத்திக்காட்டும் விதமாக சில கருத்துக்களை கூறினார்.
பின்னர் கேமராவிடம் சென்று தான் சொன்ன கருத்துக்கள் என் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்தது, அதை ஒளிபரப்பி விடாதீர்கள் என்று பேசியிருந்தார் ஆயிஷா. இதற்கு பதிலடி கொடுக்கும. விதமாக ஆயிஷா பற்றி அவரது முன்னாள் காதலரும், ஆயிஷாவுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு வாங்கி கொடுத்தவருமான தேவ் பல அதிர்ச்சி அளிக்கும் தகவல்களை கூறினார்.
அதில், ஆயிஷாவுக்கு ஏற்கனவே இரண்டு திருமணங்கள் முடிந்து, அதை மறைத்து மூன்றாவதாக என்னை காதலித்து வந்தார். சத்யா சீரியலில் நடித்துக் கொண்டிருந்த போது அதன் ஹீரோ விஷ்ணுவுடன் காதல் ஏற்பட என்னை கழட்டிவிட்டார். இப்போது விஷ்ணுவையும் கழற்றிவிட்டு தனது தங்கையின் காதலன் யோகேஷ் என்பவரை காதலித்து வருவதாக பேட்டி அளித்துள்ளார்.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.