6 பேரை வீட்டைவிட்டு வெளியேற்றிய பிக்பாஸ்.. அதிரடி விதிமுறைகளால் அதிர்ச்சியடைந்த போட்டியாளர்கள்..!

Author: Vignesh
2 October 2023, 3:15 pm

இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி நேற்று மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

bigg boss-updatenews360 3

ஆரம்பமான முதல் நாளே அதிரடியாக ஆறு போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில், வீட்டை விட்டு வெளியே அனுப்பப்பட்டுள்ளனர். அதாவது ஸ்மால் பாஸ் வீட்டிற்கு ஒவ்வொரு வாரம் தலைவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு போட்டியாளர்கள் அனுப்பப்படுவார்கள்.

bigg boss-updatenews360 3

இவர்கள் ஸ்மால் பாஸ் வீட்டை விட்டு பிக்பாஸ் வீட்டிற்கு செல்லவே கூடாது. எந்த டாஸ்க்களிலும், இவர்கள் பங்கு பெறக்கூடாது. ஷாப்பிங் செய்ய முடியாது என பல கட்டுப்பாட்டுகளை போட்டு இருக்கிறார் பிக் பாஸ். ஸ்மால் பாஸ் வீட்டிற்கு சென்ற நிக்சன், அனன்யா, பாவா செல்லத்துரை, வினுஷா தேவி, ஐஷு மற்றும் ரவீனா ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி