பிக்பாஸ் 8 நிகழ்ச்சி தொகுத்து வழங்கப்போவது இந்த நடிகர் தான்… லேட்டஸ்ட் தகவல்!

Author:
15 August 2024, 12:55 pm

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ந்து ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி இதுவரை 7 சீசன்கள் முடிவடைந்து விரைவில் 8-வது சீசன் துவங்க இருக்கிறது. முதல் சீசனில் இருந்து இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகரும் உலகநாயகனுமான கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி வந்தார்.

இந்த நிலையில் 8-வது சீசன் தான் தொகுத்து வழங்கப் போவதில்லை எனக்கூறி அதிரடியான அறிவிப்பை ஒன்றை வெளியிட்டு அதிலிருந்து வெளியேறி இருந்தார். இதனால் அக்டோபர் மாதம் துவங்கவிருக்கும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொகுத்து வழங்கப் போவது யார் ?என்ற பேச்சு தான் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொகுப்பாளராக விஜய் சேதுபதி தான் கமிட் ஆகியிருக்கிறாராம். அவரை வைத்து முதல் நிகழ்ச்சி ஷோக்கான ப்ரோமோ நிகழ்ச்சியும் எடுத்து விட்டதாக கூறப்படுகிறது. வருகிற அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி துவங்கும் எனும் கூறப்படுகிறது. எனவே விஜய் சேதுபதி கமல் விட்டு சென்ற இடத்தை நிரப்புவாரா என்பது ரசிகர்களின் கேள்வியாக இருந்து வருகிறது.

  • monalisa viral girl soon get chance to act in serial பட வாய்ப்பு பறிபோனால் என்ன?… வைரல் பெண் மோனலிசாவுக்கு வந்த திடீர் வாய்ப்பு?