பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மூலம் பிரபலமான, தெருக்கூத்து கலைஞர் தாமரை செல்வி, தற்போது திரைப்பட நடிகையாக மாறியுள்ளார். படப்பிடிப்பில் இருந்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது தாறுமாறாக வைரலாகி வருகிறது.
நடந்து முடித்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மற்றும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சிறப்பாக விளையாடியவர் தாமரை செல்வி. தனக்கு ஏகப்பட்ட குடும்ப பிரச்சனை மற்றும் கடன்கள் இருந்தும், பிக்பாஸ் கொடுத்த பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே செல்லாமல்… மற்ற போட்டியாளர்களுக்கு டஃப் கொடுத்து விளையாடியது இவர் மீது தனி மரியாதையை ஏற்படுத்தியது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் வரும் போது, கள்ளக்கபடம் இல்லாமல் இவர் பேசியது… நடந்து கொண்ட விதம் போன்றவை இவர் நடிக்கிறாரோ என்கிற சந்தேகத்தை கூட வரவைத்து. எனவே இவர் வந்த வேகத்திலேயே பிக்பாஸ் வீட்டை விட்டு செல்வார் என பலர் எதிர்பார்த்தனர்.
ஆனால் அனைவரது நினைப்பையும் பொய்யாக்கி, பிக்பாஸ் விளையாட்டை கில்லி போல் விளையாடினார். அதே போல் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் இவரது விளையாட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
பெரிதாக எந்த ஒரு அவப்பெயரும் இன்றி வெளியே வந்த தாமரை, BB ஜோடிகள் நிகழ்ச்சியில்.. தன்னுடைய கணவருடன் சேர்ந்து நடனத்திறமையை வெளிக்காட்டி ஃபைனல் வரை வந்தார். ஒரு சில விஷயங்களால் இவரால் வெற்றி கோப்பையை கைப்பற்ற முடியாமல் போனது.
இந்த நிலையில் பிக்பாஸ் தாமரைக்கு ஜாக்பாட் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது சினிமா வாய்ப்பை தட்டி தூக்கியுள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “திரைப்பட படப்பிடிப்பில்” என்ற கேப்ஷனுடன் கூடிய இரண்டு புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். அதில் சிங்கம் புலி மற்றும் ரோபோ சங்கர் ஆகிய இருவருடன் இருக்கும் புகைப்படங்களை அவர் பதிவு செய்துள்ள நிலையில் இந்த இருவரில் ஒருவருக்கு அவர் ஜோடியாக நடிக்கிறாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
ஒரு தெரு கூத்து கலைஞகராக அறியப்பட்டு, ரசிகர்களின் பேராதரவோடு தற்போது வெள்ளித்திரை வாய்ப்பபை கைப்பற்றி திரைப்பட நடிகையாக மாறியுள்ள இவருக்கு வாழ்த்துக்கள் குவித்து வருகிறது. விரைவில் இவர் நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…
கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…
எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கொளத்தூரை சேர்ந்தவர் செல்லப்பன். இவரது 2 ஆவது மகள் விக்னேஸ்வரி (24). பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில்…
தோல்வி இயக்குனருடன் கூட்டணியா? “விடுதலை 2” திரைப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி “ஏஸ்”, “டிரெயின்” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும்…
This website uses cookies.