ஜிபி முத்துவை அழவைத்த பெண் போட்டியாளர்.. அடுத்த Elimination இவங்கதான் பொங்கி எழும் ஆர்மிப்படை..!

Author: Vignesh
13 October 2022, 4:15 pm

பிக்பாஸ் 6 ஆவது சீசன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வருகிறது. பிக்பாஸ் வீட்டிற்குள் பல பிரபலங்கள் சென்றுள்ளதை போல் யூடியூப் மற்றும் டிக்டாக் மூலம் பிரபலமான ஜிபி முத்துவும் சென்றிருக்கிறார்.

ஜிபி முத்துவிற்கு பல லட்ச ரசிகர்கள் உள்ளனர். பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தவுடன் கமல் ஹாசனையே கதறவிட்ட சம்பவம் இணையத்தில் வைரலானது. ஜிபி முத்துவிற்கென்று தனியாக ஆர்மி ஆரம்பிக்கப்பட்டு ரசிகர்கள் பலர் ஆதரவை அளித்து வந்தனர்.

BB 6 updatenews360.jpg1

வீட்டில் டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, அவரை பார்த்தாலே காண்டாகுது என்று கூறியும் அவரை வம்புக்கு இழுத்தும் வருகிறார். இந்நிலையில் ஒரு பிரச்சனையில் தனலட்சுமியை வா, போ என்று ஜிபி முத்து கூறியதால் கடுப்பான தனலட்சுமி அப்படியொல்லம் பேச வேண்டாம், உங்களுக்கு எல்லாம் தெரியும் நீங்கள் நடிக்கிறீர்கள் என்று கூறிவிட்டார்.

இதனால் வருத்தத்தில் இருந்த ஜிபி முத்து நான் நடிக்கிறேனா? என்று சக போட்டியாளர்களிடம் கூறி கதறி அழுது விட்டார் . இந்த பிரமோ தற்போது வெளியான நிலையில் தனலட்சுமியை வைத்து மீம்ஸ் கிரியேட் செய்து ஜிபி முத்துவின் ஆர்மிப்படைகள் கலாய்த்து வருகிறார்கள்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!