நான் செய்த பெரிய தவறு… மனுஷன் எவ்வளவு வேதனை பட்டிருந்தால் இப்படி சொல்லுவாரு!

Author:
7 October 2024, 1:18 pm

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபல வில்லன் நடிகராக இருந்து வந்தவர் தான் ரகுவரன் இவர் பல்வேறு திரைப்படங்களில் மிரட்டலான வில்லன் வேடம் ஏற்றும் அடித்து அனைவரது கவனத்தை ஈர்த்து தவிர்க்க முடியாத வில்லன் நடிகராக தமிழ் சினிமாவில் இடத்தை பிடித்தார்.

முதன் முதலில் ஹீரோவாக திரைப்படங்களின் நடிக்க ஆரம்பித்து அதன் பிறகு எதிர் நாயகனாக நடிக்க ஆரம்பித்தார். ஹீரோவாக நடித்ததை காட்டிலும் வில்லன் வேடம் இவருக்கு பக்காவாக பொருந்த ஆரம்பிக்க பின்னாளில் அவர் வில்லன் நடிகராகவே மாறிவிட்டார் .

குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பாட்ஷா திரைப்படம் மற்றும் அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த முதல்வன் உள்ளிட்ட திரைப்படங்களில் இவரது வில்லத்தனமான நடிப்பு எல்லோருது கவனத்தையும் கவர்ந்தது .

raghuvaran

இந்த நிலையில் பிரபலமான நடிகராக நட்சத்திர அந்தஸ்தில் இருந்து வந்த நடிகர் ரகுவரன் நடிகை ரோகிணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள்.

இதனிடையே ரகுவரன் கடந்த 2008 ஆம் ஆண்டு உடல் நலக் குறைவு காரணமாக காலமாகிவிட்டார். இந்த நிலையில் ரகுவரன் பல வருடங்களுக்கு முன் தான் உயிரோடு இருக்கும்போது பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Raghuvaran

அந்த நேர்காணலில் நடிகர் ரகுவரனிடம் நீங்க வாழ்க்கையில் பண்ண மிகப்பெரிய தப்பு அப்படி என்றால் எது நினைக்கிறீங்க? என கேள்வி எழுப்பியதற்கு… நான் நடிகன் ஆனது தான் மிகப்பெரிய தவறு என கூறினார். என்ன காரணம் என கேள்வி எழுப்பியதற்கு ஏன்னா இதைவிட நல்ல சந்தோஷமா ஒரு சின்ன வீடு கட்டிக்கிட்டு… ஒரு நிலத்தில் பயிரிட்டு…. …

விளையிற பயிறு முதுகுல சுமந்துட்டு போய் மார்க்கெட்ல போட்டு. அதன் மூலம் கிடைக்கிற சாப்பாட்டுல கஞ்சியோ கூழோ குடிச்சிட்டு நிம்மதியா படுத்து துங்கி ஆண்டவனே இன்னைக்கு மழை வரணும் என வேண்டிக் கொண்டு ஆடு மாடு கோழி இது எல்லாத்தையும் வச்சு வளர்த்துட்டு அதுங்களுக்கு சாப்பாடு கொடுத்துட்டு நமக்கு உதவிக்குனு ஒருத்தர் இருந்தா அந்த வாழ்க்கையே வேற தான் .

இதையும் படியுங்கள்: யாரை கேட்டு நீ இங்க வந்த…? பிக்பாஸ் 8 ல் மகள் – கடிந்து கொண்ட விஜய் சேதுபதி – வைரல் வீடியோ!

Actor raguvaran

வாழ்க்கை நம்ம வாழ்வதெல்லாம் வாழ்க்கையே கிடையாது என வாழ்க்கை பற்றிய தெளிவான புரிதலை ரகுவரன் அந்த பேட்டியில் பேசியிருப்பார். இந்த வீடியோ தற்போதைய இணையத்தில் வைரலாக மனுஷன் எவ்வளவு வேதனைப்பட்டு இருந்தால் வாழ்க்கை மகிழ்ச்சியோடு வாழ நினைத்திருந்தால் இவ்வளவு. வருத்தத்தோடு ஆதங்கப்பட்டு பேசி இருப்பார் என ரசிகர்கள் இந்த வீடியோவை பார்த்து வைரல் ஆக்கி வருகிறார்கள்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 308

    0

    0