தயாரிப்பாளர் மகனுடன் காதல் திருமணம்?.. உண்மையை உடைத்த நடிகை வர்ஷா பொல்லம்மா..!

Author: Vignesh
29 October 2022, 10:30 am

சசிக்குமாரின் வெற்றிவேல் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அதிகம் பிரபலம் ஆனவர் வர்ஷா பொல்லம்மா. அவர் அதற்கு பிறகு 96ல் விஜய் சேதுபதி,பிகில் படத்தில் விஜய் உடன் நடித்து இருந்தார்.

கன்னட நடிகையான அவர் தற்போது தமிழ், தெலுங்கில் தான் அதிகம் நடித்து வருகிறார். ஹீரோயினாக நடிக்கவில்லை என்றாலும் பல படங்களில் சின்ன ரோல்கள் அவருக்கு அதிகம் கிடைத்து வந்தது.

varsha bollamma-updatenews360

இந்நிலையில் வர்ஷா பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவரின் மகனுடன் காதலில் இருக்கிறார், விரைவில் திருமணமும் நடைபெற இருக்கிறது என தெலுங்கு மீடியாக்களில் செய்தி வெளியாகி இருக்கிறது.

ஆனால் அது முற்றிலும் பொய்யான செய்தி என வர்ஷா பொல்லம்மா விளக்கம் தெரிவித்து இருக்கிறார். ‘அந்த மாப்பிள்ளை யார் என சொல்லுங்க, அப்போது தான் என் குடும்பத்தினரிடம் சொல்ல முடியும்’ என அவர் கலாய்த்து இருக்கிறார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி