இந்த படத்தை தெரியாமல் ஒப்புக்கொண்டேன்..! ‘இன்றும் அதை நினைத்து வருத்தப்படுகிறேன்’.. வெளிப்படையாக சொன்ன பிகில் பட நடிகை..!

Author: Vignesh
15 October 2022, 10:32 am

தமிழ் சினிமா உலகில் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் வளர்ந்து வரும் இளம் கதாநாயகிகளில் ஒருவராக இருந்து வருபவர். மேயாத மான் என்ற படத்தின் மூலம் நடிகையாக கடந்த 2017-ஆம் ஆண்டு அறிமுகமானார் நடிகை இந்துஜா. தனது முதல்படத்திலேயே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இதனை தொடர்ந்து மெர்குரி, 60 வயது மாநிறம், பூமராங், மகாமுனி போன்ற பல படங்களின் தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டி ரசிகர்களிடையே, பெருத்த வரவேற்பை பெற்றார். நடிகை இந்துஜா குறிப்பாக விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

Indhuja Ravichandran (4)

நானே வருவேன் என்ற திரைப்படத்தில் தனுசுக்கு மனைவியாக, நடித்திருந்தார் நடிகை இந்துஜா. இந்நிலையில் தான் நடித்ததிலேயே தனக்கு பிடிக்காத படம் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் வெளியான பில்லா பாண்டி என்ற படம் என்று வெளிப்படையாக கூறியுள்ளார் நடிகை இந்துஜா. இப்படி வெளிப்படையாக கூறியிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பில்லா பாண்டி திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்பதால், இப்படி அவர் பேசியதை தெரிந்து கொண்ட நடிகர் ஆர்.கே.சுரேஷ் ஏற்றி விட்ட ஏணியை எப்போதும் மறக்ககூடாது என்று தக்க பதிலடியும் கொடுத்திருக்கிறார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ