குடி குடியை கெடுத்தது… காமெடி நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்!

Author:
27 August 2024, 11:09 am

பிளாக் ஷீப் YouTube சேனலில் பிராங்க் வீடியோ செய்ததன் மூலமாக மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் தான் பிஜிலி ரமேஷ். குடித்துவிட்டு சாலையில் சென்று கொண்டிருந்த பிஜிலி ரமேஷை பிடித்து பிராங் செய்கிறோம் என்று ஒரு வீடியோ எடுத்து வெளியிட்டனர்.

அந்த வீடியோவில் மிகவும் கலகலப்பாக காமெடிடன் பேசிய பிஜிலி ரமேஷ் ஓவர் நைட்டில் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி விட்டார். எந்த குடியால் அவர் சினிமாவில் நடிகராக அறிமுகமானாரோ அதே குடிபோதையால் இன்று அவர் மரணித்திருக்கிற செய்தி ஒட்டுமொத்த திரையுலகினரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

ஆம் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக குடி போதைக்கு அடிமையாகி படுத்த படுக்கையாக இருந்து வந்த பிஜிலி ரமேஷ் தற்போது சிகிச்சை பலன் இன்றி திடீரென மரணம் அடைந்திருக்கிறார். ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளிவந்த நட்பே துணை படத்தின் மூலமாக காமெடி நடிகராக திரைத்துறையில் அறிமுகமானார் பிஜிலி ரமேஷ்.

தொடர்ந்து பொன்மகள் வந்தால், ஆடை ,கோமாளி, ஜாம்பி உள்ளிட்ட பல திரைப்படங்களை சின்ன சின்ன கதாபாத்திரங்களை ஏற்று மிகச் சிறந்த காமெடியை வெளிப்படுத்தி நடித்து மக்களின் மனம் கவர்ந்த நடிகராக இருந்து வந்தார். இதனிடையே சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 9 மணி அளவில் மரணித்திருக்கும் பிஜிலி ரமேஷின் உடல் இறுதிச்சடங்கு இன்று மாலை 5 மணிக்கு எம்ஜிஆர் நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என கூறப்பட்டிருக்கிறது.

  • kamal haasan ott streaming after 8 weeks கமல்ஹாசன் செய்த திடீர் புரட்சி! ஓடிடி விநியோகத்தையே தலைகீழாக புரட்டிப்போட்ட சம்பவம்?