அந்த மாதிரி டார்ச்சர் கொடுத்த பிரதீப்.. TRP-க்காக கண்டுகொள்ளாத பிக் பாஸ்..!

Author: Vignesh
7 November 2023, 11:35 am

பிக் பாஸ் 7 சீசன் பற்றி தான் தற்போது பெரிய பேச்சாக சமூக வலைதளங்களில் இருந்து வருகிறது. அதற்கு காரணம் ரெட் கார்டு கொடுக்கப்பட்ட பிரதீப் தான். பிரதீப்பின் வெளியேற்றம் எல்லை மீறி நடந்து கொண்டதாலும், பெண்களுக்கு வீட்டில் அவரால் பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தாலும் பலர் அளித்த புகாரின் பேரில் வெளியேற்றப்பட்டார். ஒருபுறம் பிரதீப்புக்கு ஆதரவான குரல்களும் சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வலைப்பேச்சு பிஸ்மி யூடியூப் பக்கத்தில் சில விவரங்களை பகிரங்கமாக தெரிவித்துள்ளார். பிரதீப் வீட்டில் இருந்தது தவறு என்று நினைக்கிறேன். அதை போல் வீட்டாரும் நினைத்தார்கள். பார்வையாளர்களிடம் இருந்து கைதட்டி வரவேற்பதை வைத்து பிரதீப் நான்தான் டைட்டில் வின்னர் என்று நம்பிக்கை வைத்திருந்தார்.

bigg boss 7 tamil-updatenews360

இதனால், அவர் மீது மற்ற போட்டியாளர்களுக்கு அச்சம் வந்தது. சுவாரசியம் கிடைப்பதால் ஒரு மனிதன் எவ்வளவு கேடு கெட்டவனாக இருந்தாலும், டிஆர்பிக்காக பிக் பாஸ் குழு கண்டுகொள்ளாமல் இருந்து இருக்கிறார்கள். முக்கிய இடத்தில் இருக்கும் கமலே இதை கண்டுகொள்ளாமல் இருந்திருக்கிறார்.

பாலியல் சில்மிசத்தில் ஒவ்வொரு பெண் போட்டியாளரிடம் நடந்து கொண்டிருக்கிறார் என்றும், இதை வெளியில் சொல்ல முடியாமல் பெண் போட்டியாளர்கள் பயந்து போனதாகவும் தெரிவித்திருக்கிறார்.

bigg boss 7 tamil-updatenews360

ஜோவிகா எனக்கு தூக்கமே வராமல் இருக்கிறது என்றும், ராத்திரியில் ஏதாவது ஒன்று உடைந்தால், பிரதீப்பின் இடத்தை தான் பார்ப்போம் என்று அடுக்கடுக்கான புகாரை அளித்திருந்தார். இதே போல் இதற்கு முன் நடந்த பிக் பாஸ் சீசன் முழுதும் இதே போன்ற நபர்கள் நடந்து கொண்டு வெளியேற்றப்பட்டு உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!