இசைவாணி தொடர்பான வழக்கு – மூவர் கைது
கானா பாடகி இசைவாணி 2017ஆம் ஆண்டு பாடிய “ஐம் சாரி ஐயப்பா” என்ற பாடல் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையும் படியுங்க: சூர்யாவுக்கு இந்த தடவ ஒர்க் அவுட் ஆகுமா…ஆர்.ஜே.பாலாஜி கொடுத்த முக்கிய அப்டேட்.!
இதன் விளைவாக,சிலர் அவரை ஐயப்பனை அவமதித்ததாகக் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்த விவகாரம் பெரிதாக பரவியதால்,இசைவாணி பல்வேறு மிரட்டல்களை எதிர்கொள்ள நேரிட்டார்.
சிலர்,அவருடைய செல்போன் எண்ணை அறிந்து அவதூறாக பேசியதோடு,அவரை பாலின ரீதியாகவும்,ஜாதியை சொல்லியும் அவரை மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால், இசைவாணி சென்னை சைபர் குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.காவல்துறை மேற்கொண்ட விசாரணையில்,மிரட்டல் விடுத்தவர்கள் முன்னாள் பாஜக நிர்வாகிகள் என தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து,மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்,வந்தவாசியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (44),பொழிச்சலூரைச் சேர்ந்த சதிஷ் குமார் (64) மற்றும் சேலத்தைச் சேர்ந்த அழகு பிரகஸ்பதி (24) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் மீது பெண்கள் மீதான வன்முறை மற்றும் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை சட்டப்பிரிவுகள் உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.