அந்த மாதிரி நெருக்கமா இருந்தோம்.. ஆனா இப்ப அஞ்சலி கண்டுக்கல.. ஃபீலிங் உடன் பிளாக் பாண்டி..!
Author: Vignesh26 January 2024, 1:15 pm
2007-ல் இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிகை அஞ்சலி ‘கற்றது தமிழ்’ படம் மூலமாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். பிறகு ‘அங்காடி தெரு’ அவரது சினிமா கரீயரில் திருப்புமுனை படமாக அமைந்தது. அதற்க்கு பின் அஞ்சலிக்கு தொட்டதெல்லாம் ஹிட்டுதான்.
எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் வந்தார். பிறகு ‘போங்கடா நீங்களும் உங்க சினிமாவும்னு’ எல்லாத்தையும் மூட்டைக்கட்டிவிட்டு ஐதராபாத் சென்று குடியேறினார்.
தமிழ் படங்களில் நீண்ட நாட்களாக அவர் நடிக்கவில்லை சாரி பாஸ் வாய்ப்பு அமையவில்லை சிங்கம்-2 படத்தில் மட்டும் ஒரு குத்து பாடலுக்கு நடனம் ஆடிவிட்டுப்போனார். தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள நாடோடிகள் 2 திரைப்படம் இழு இழுவென இழுத்து அதன் பிறகு release ஆகி ஓடாமல் போய்விட்டது. அதன்பின் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வந்த “லவ் பண்ணா விட்டிரனும்” குறும்படம் ஒன்றிலும் “நிசப்தம்” என்னும் படத்திலும் நடித்தார். தற்போது, அஞ்சலி தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பிளாக் பாண்டி அஞ்சலி குறித்து பேசி உள்ளார். அதில், அவர் நானும் அஞ்சலியும் அங்காடித்தெரு படத்திற்கு முன்பு எங்கள் இடையே பழக்கம் இருந்தது. ரொம்ப நெருக்கமாக பழகி வந்தோம். நானும் அவரும் நடன அமைப்பாளர் ஜெயந்தி மாஸ்டரின் மாணவர்கள். அஞ்சலி நடனமாடும் போது ஒழுங்கா ஆடு என்று கூட கிண்டல் செய்யும் அளவுக்கு உரிமையில் இருந்தேன்.
அங்காடி தெரு படத்திற்கு பின்னர் ஜெயம் ரவியின் சகலகலா வல்லவன் படத்தில் அஞ்சலியுடன் இணைந்து நடித்த அந்த சமயத்தில், அஞ்சலி என்னுடன் சரியாக பேசவில்லை. நான் இது தொடர்பாக அவரிடமே கேட்டேன். அதற்காக அதெல்லாம் ஒன்னும் இல்லை என்று மழுப்பலாக பதில் தெரிவித்தார். யாரிடம் பேச வேண்டும் பேசக்கூடாது என்பது அவருடைய தனிப்பட்ட விருப்பம் தானே, என்பது கடைசியில் தான் புரிந்து கொண்டேன் பிளாக் பாண்டி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.