தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து அதன் பின்னர் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்து பிறகு திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்க இன்று பிரபலமான ஹீரோவாகவும் முன்னணி இடத்தை தக்க வைத்துக்கொண்டிருப்பவர் தான் நடிகர் கவின்.
நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து அதன் பிறகு சரவணன் மீனாட்சி தொடர் இரண்டாவது சீசனில் நடிக்க ஆரம்பித்தார். அதன் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார். பிறகு திரைப்படங்களில் அதிக ஆர்வத்தை செலுத்தி வாய்ப்பு தேட ஆரம்பித்தார்.
அவருக்கு ஒரு சில திரைப்பட வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக பீட்சா திரைப்படத்தில் சிறப்பு தோற்றம் நடித்திருந்தார். நேற்று இன்று நாளை உள்ளிட்ட திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.
மேலும் படிக்க: குழந்தைனு கூட பாக்காம என்கிட்ட.. அட்ஜஸ்ட்மென்ட் குறித்து ஜெயம் ரவி பட நடிகை உருக்கம்..!
நட்புன்னா என்னனு தெரியுமா திரைப்படத்தில் நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்தார் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கவினுக்கு டாடா திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது. அது அவருக்கு மிக பெரிய அடையாளமாகவும் பார்க்கப்பட்டது.
அந்த படத்திற்கு பிறகு ஸ்டார் திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது கவின் நடிப்பில் உருவாகி திரையரங்குகளில் வெளியாக காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் பிலெடி பெக்கர். இந்த திரைப்படத்தில் கவின் பிச்சைக்காரன் கேரக்டரில் வித்தியாசமான ரோலில் நடித்திருக்கிறார்.
இதையும் படியுங்கள்:
அவரது தோற்றம் படத்தை பார்க்கக்கூடிய ஆர்வத்தை தூண்டுகிறது இந்நிலையில் படத்தை பார்த்து முதல் விமர்சனம் தற்போது வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்த திரைப்படம் கண்டிப்பாக சூப்பர் ஹிட் என பலரும் கூறி இருக்கிறார்கள். இது படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரிக்க செய்திருக்கிறது.