90ஸ் காலகட்டத்தில் பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்து கொண்டிருந்த நடிகர் பிரசாந்த் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட சில பிரச்சனை காரணமாக சினிமாவில் இருந்து பல வருடம் ஒதுங்கியிருந்தார். திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்த இவர் தற்போது மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்ஸ் துவங்கி இருக்கிறார்.
நடிகர் பிரசாத். தற்போது விஜய்யுடன் “கோட்” திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார். இது தவிர நடிகர் பிரசாந்த் அந்தகன் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். பாலிவுட் நடிகர் ஆன ஆயிஷ்மான் குரானா நடிப்பில் வெளிவந்த “அந்தாதூன்” படத்தின் தமிழ் ரீமேக் தான் “அந்தகன்” திரைப்படம். இந்த திரைப்படம் ஆகஸ்ட் 9ம் ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது.
அந்தகன் திரைப்படத்திற்கு ரசிகர்கள் பேராதரவு கொடுத்து வருகிறார்கள். படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இப்படியான நேரத்தில் அந்தகன் திரைப்படத்திற்கு விமர்சனம் செய்த ப்ளூ சட்டை மாறன் படத்தை வெகுவாக புகழ்ந்து பாராட்டியதோடு தியேட்டரில் போய் பாருங்கள் என கருத்தும் கூறியிருக்கிறார்.
அவரின் இந்த கருத்து ரசிகர்களுக்கே பெரும் ஷாக் கொடுத்திருக்கிறது. காரணம் முன்னதாக வெளிவந்த எந்த ஒரு திரைப்படத்திற்கும் பெரிதாக அவர் இது போன்ற விமர்சனங்கள் கொடுப்பதில்லை. அவர் பாராட்டி புகழ்ந்து ஒரு திரைப்படத்தை விமர்சித்து விட்டால் அந்த திரைப்படம் நிச்சயம் வெற்றி படமாக அமைந்துவிடும் என அந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளே விரும்புகிறார்கள். எனவே ப்ளூ சட்டை மாறனிடம் பாஸ் ஆகிவிட்டால் போதும் என நடிகர்கள் விரும்பும் சமயத்தில் பிரசாந்தின் அந்தகன் திரைப்படத்திற்கு அவர் பாசிட்டிவ் விமர்சனம் கொடுத்திருப்பது எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.