பிச்சைக்காரன் வாந்தி எடுத்து போல் இருக்கு….. “ப்ளடி பெக்கர்” படத்தை விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்!

Author:
1 November 2024, 4:24 pm

இந்த ஆண்டின் தீபாவளி தினத்தை முன்னிட்டு சிவகார்த்திகேயனின் அமரன், ஜெயம் ரவி பிரதர் மற்றும் கவினின் ப்ளடி பெக்கர் உள்ளிட்ட திரைப்படங்கள் திரைக்கு வெளிவந்திருக்கிறது.

இதில் ப்ளடி பெக்கர் மற்றும் பிரதர் திரைப்படங்களை சிவகார்த்திகேயன் அமரன் திரைப்படம் தூக்கி வாரி சாப்பிட்டு விட்டது .

amaran

விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் அமரன் திரைப்படம் டாப் இடத்தில் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள் .

மேலும் படத்தைப் பார்த்த ஆடியன்ஸ் பலரும் அமரன் திரைப்படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களை குவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ப்ளடி பெக்க படத்தை ப்ளூ சட்டை மாறன் மிகவும் மோசமாக விமர்சனம் செய்து படத்தை முழுவதுமாக டேமேஜ் செய்து விட்டார் .

நெல்சன் தயாரிப்பில் சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் கவின் நடிப்பில் வெளிவந்திருக்கும் இந்த திரைப்படத்தில் ரெடின் கிங்ஸ்லி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்: அது மட்டும் நடந்தா நான் பிக்பாஸே பார்க்கமாட்டேன் – இந்த வாரம் வெளியேறப்போகும் நபர் இவர் தான்!

இந்த நிலையில் இப்படத்தை விமர்சனம் செய்துள்ள ப்ளூ சட்டை மாறன் ப்ளடி பெக்கர் திரைப்படத்தில் கவின் நடிப்பு மட்டுமே படத்தில் ஆறுதலாக இருக்கிறது .

மற்றபடி கதை மற்றும் திரைக்கதை எல்லாம் பிச்சைக்காரன் வாந்தி எடுத்து வைத்தது போல தான் இருக்கிறது என கடுமையாக விமர்சித்திருக்கிறார் .

Kavin Bloody Beggar

மேலும். இந்த படம் ஹாலிவுட்டில் 2019ல் வெளிவந்த “Ready or Not” படத்தின் அப்பட்டமான காப்பி என ப்ளூ சட்டை மாறன் விமர்சித்து ட்ரோல் செய்திருக்கிறார் .

இதன் மூலம் கவினையும் அவரது படத்தையும் மொத்தமாக சொல்லி முடித்துவிட்டார் ப்ளூ சட்டை மாறன். டார்க் காமெடி படமாக இருக்கும் என எதிர்பார்த்து தியேட்டருக்கு சென்று பார்த்தால் எல்லாமே மொக்க காமெடியா இருக்கு.

மொத்தமும் நம்ம உயிரை வந்து வாங்குது என்ன ப்ளூ சட்டை மாறன் படத்தை கடுமையாக கழுவி ஊற்றி விட்டார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 153

    0

    0