அவ்ளோவ் தான் சோலி முடிஞ்சுது…. ஒரே ஒரு ட்விட் பதிவில் தனுஷுக்கு ஆப்பு வச்ச ப்ளூ சட்டை!

Author: Rajesh
13 January 2024, 2:22 pm

அருண் மாத்தேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள படம் கேப்டன் மில்லர். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து கன்னட நடிகர் சிவராஜ் குமார், தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன், பிரியங்கா மோகன், அதிதி பாலன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக நடைப்பெற்று வந்தது. அது மட்டுமன்றி, இப்படத்தின் கதை, உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது. பீரியட் ஜானர் படமாக உருவாகியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் இந்தியா விடுதலை ஆகும் முன்னர் பிரிட்டிஷ் மற்றும் இந்தியர்களுக்கு நடந்த போர் குறித்து படத்தின் கதை அமைந்துள்ளது.

captain-miller-1

இப்படத்தின் மூன்று கெட்டப்புகளில் நடித்துள்ள தனுஷ் பிரிட்டிஷ் ராணுவத்தில் வேலை பார்க்கும் கேப்டன் மில்லர் கெட்டப்பில் ரொம்பவே இளமையாக நடித்து மாஸ் காட்டியுள்ளார் மேலும் இன்னும் இரண்டு கெட்டப்கள் ஆக்‌ஷனில் தெறிக்கும் என கூறப்படுகிறது. பிரிட்டிஷ் ராணுவத்தில் சேருவதையே தனது லட்சியமாக கொண்டுள்ள தனுஷ், அதில் சேர்ந்த பின்னர் அவரது வாழ்வில் நடக்கும் மாற்றங்கள் தான் “கேப்டன் மில்லர்” படத்தின் கதை.

இப்படத்தில் அதிர ஆக்ஷன் காட்சிகள் உள்ளது, தனுஷின் நடிப்பு பெருவாரியான மக்களின் பாராட்டுக்கு உள்ளாகியுள்ளது. முதல் நாளிலே இப்படம் ரூ. 14 கோடி வசூல் ஈட்டியுள்ளதால் படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்துள்ளது. எனவே படத்தின் தயாரிப்பாளர் வசூலில் மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்துள்ளதால் தனுஷுக்கு மாலை அணிவித்து பாராட்டியுள்ளார். இதுகுறித்து பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில், முதல் நாளிலே சக்ஸஸ் மீட் கொண்டாடிட்டாங்க. அப்போ படம் அவ்வளவு தான் ஃபிளாப்பா என விமர்சித்துள்ளார். இதை பார்த்து தனுஷ் ரசிகர்கள் கொந்தளித்து கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.

.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 500

    0

    0