ப்ளூ சட்டை மாறன் யூடிப்பில் படங்களை ரிவியூ செய்யும் விமர்சகர்களுள் பிரபலமானவர். சீசனுக்கு தகுந்த மாதிரி விஜய் மற்றும் அஜித் ரசிகர்களை சீண்டி வாங்கி கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
என்னதான் ரசிகர்கள் ப்ளு சட்டை மாறனை கழுவி ஊற்றினாலும் எதைப்பற்றி கவலைப்படமால் சகட்டுமேனிக்கு எல்லா ஸ்டார் நடிகர்களையும் வச்சு செய்ப்பவர்.
நல்ல படங்களுக்கும் ப்ளு சட்டை மாறன் நெகட்டிவ் விமர்சனம் தருவதாகவும், தனது ரிவியூவில் உருவக்கேலி செய்வதாகவும் எதிர்ப்புகள் எழுவது வழக்கமாக இருந்து வருகிறது.
ஆனாலும் ப்ளு சட்டை மாறனின் விமர்சனத்திற்கு என்றே தனியொரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது என்றால் அது நம்பமுடியாத ஒன்றாக உள்ளது. மேலும் தற்போது சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கும் ப்ளு சட்டை மாறன், ட்விட்டரில் பகிரும் பதிவுகள் மூலம் ஸ்டார் நடிகர்களின் ரசிகர்களை சீண்டி வருகிறார்.
அந்த வகையில் தற்போது ப்ளு சட்டை மாறன் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்துள்ள படத்தை விமர்சித்துள்ளார்.
ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்துள்ள சமூக கருத்து கொண்ட அகிலன் திரைப்படம் பலரின் பாராட்டை பெற்று வருகிறது. ஆனாலும் சாமானிய மக்களுக்கு இந்த திரைப்படம் அப்படி என்னதான் சொல்ல வருகிறது என்பது தெளிவாக புரியவில்லை என்ற கருத்தும் நிலவி வருகிறது. இருந்தாலும், படம் முதலுக்கு மோசம் இல்லை என்ற ரீதியில் வசூலை பெற்று வருகிறதாம்.
அகிலன் படத்தில் துறைமுகம், கண்டெய்னர் போன்ற காட்சிகள் தான் ரிப்பீட் மோடில் வருவதாக ரசிகர்கள் கூறி வரும் நிலையில், ப்ளூ சட்டை மாறன் அகிலன் திரைப்படத்தை பற்றிய தன்னுடைய விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.
அகிலன் திரைப்படத்தை ப்ளூ சட்டை மாறனும் தன் பங்குக்கு கலாய்த்து ஜெயம் ரவி எப்படித்தான் ஓகே செய்தார் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதனிடையே, படத்தில் ஜெயம் ரவியை டெரராக காட்ட வேண்டும் என்று இயக்குனர் பல முயற்சிகளை செய்து இருந்தாலும், ஜெயம் ரவியை க்ளோஸ் அப் காட்சியில் பார்த்தால் அமுல் பேபி என்று கொஞ்ச தான் தோன்றுகிறது என ப்ளூ சட்டை மாறன் பங்கமாக கலாய்த்துள்ளார்.
மேலும் ஒரு திரைப்படம் என்று வந்து விட்டால் குறைந்தபட்சம் 60 சீன்களாவது இருக்கும் ஆனால் இந்த படத்தில் ஒரு சீனே 15 நிமிடங்கள் வருவதாகவும், கருத்து சொல்கிறேன் என்ற பெயரில் கழுத்தை அறுக்கிறார்கள் என்றும், இப்படி உங்களின் கருத்தை கேட்டு கேட்டே நான் கருத்து விட்டேன் என்று படத்தை கிழித்து தொங்கவிட்டுள்ளார்.
இப்படி எந்த அளவுக்கு முடியுமோ அப்படி அகிலன் படத்தை ப்ளூ சட்டை மாறன் பயங்கரமாக விமர்சித்துள்ளதற்கு ரசிகர்களும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, அகிலன் படத்தை தியேட்டரில் ஒரு கட்டத்திற்கு மேல் உட்கார்ந்து பார்க்கவே முடியவில்லை என்றும் சிலர் சோசியல் மீடியாவில் கதறி வருகிறார்கள்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.