அஜித்தை தொடர்ந்து விஜய்யை வம்புக்கு இழுக்கும் புளுசட்டை மாறன்… கொதிக்கும் ரசிகர்கள்..

Author: Rajesh
9 March 2022, 6:08 pm

தயாரிப்பாளரும், இயக்குனரான கே.ராஜன் நேர்காணலிலும், மேடைப் பேச்சுகளிலும் பேசும் பேச்சுக்கள் அவ்வப்போது பெரும் சர்ச்சையாகி வருகின்றது. அப்படி கே. ராஜன் சமீபத்தில் ஒரு பொதுவெளியில் பேசிய பேச்சு, தற்போது சமூக வலைதளங்களின் பேசு பொருளாக உருவாகியுள்ளது.

இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் பிகில். இந்த படத்தை கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருந்தது.
இந்த படம் குறித்து பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன் அவர்கள் பிகில் படத்தால் 30 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாகவும், இதற்கு பெரிய ஹீரோக்கள் வாங்கும் சம்பளம் தான் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.

நூறு கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கக்கூடிய பெரிய நடிகர்கள் அதனை எங்கே பதுக்கி வைத்து இருக்கிறீர்கள்..? ஹீரோக்கள் எல்லாம் தயாரிப்பாளர்களின் ரத்தத்தை உருஞ்சுகிறார்கள் என்று அடுக்கடுக்காக குற்றம் சுமத்தினார். நீங்கள் படத்தில் பந்தா காட்டாமல் அடக்கமாக நடிக்க வேண்டும் என்றும் விஜய்யை அவர் கூறி இருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தகவலை சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதனை டிவீட் செய்து இருக்கிறார். இதற்கு முன் அஜித்தின் வலிமை திரைப்படத்தை பார்த்துவிட்டு இவர் கூறிய விமர்சனம் மற்றும் அஜித்தை தனிப்பட்ட முறையில் இவர் தாக்கிப் பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், விஜய்யையும் வம்புக்கு இழுத்து கொண்டிருக்கிறார். இது தேவையா உங்களுக்கு என்று பலரும் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

  • Ajith reunite Again With Adhik அஜித்துடன் மீண்டும் கூட்டணி… உருவாகும் மார்க் ஆண்டனி 2.. ஆதிக் முடிவு!!
  • Views: - 1756

    0

    1