சுறாவை வச்சி ஆட்சியை புடிக்க தாமரை ஆர்மி திட்டம்.. -விஜய்யை வம்பிழுக்கும் ப்ளூ சட்டை..!
Author: Vignesh19 ஜூன் 2023, 10:45 காலை
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் விஜய் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை சந்தித்து ஊக்குத்தொகை வழங்கும் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.
இதில் அரசியல் குறித்து பல விமர்சனங்களை மேடையில் பேசுகையில் விஜய் முன் வைத்தார். இதற்கு சமூக வலைதளங்களில் விஜய் அரசியலில் விரைவில் வரப்போகிறார் என்று பலதரப்பட்ட கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பிரபல திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் சூப்பு ஸ்டாரை மீம்ஸ் போட்டு அரசியலுக்கு வராமல் காலி பண்ணியாச்சு என்றும், அதனால் கமாண்டர் சுறாவை வச்சு ஆட்சியைப் பிடிக்க தாமரை ஆரம்பித்திட்டம் போட்டுள்ளதாகவும், நம்மாலு ரெய்டுல சிக்கனுதான வேற வழி இல்லாம அரசியலுக்கு வந்தாக வேண்டி கட்டாயப்படுத்தி இருக்கானுங்க ஊருக்குள்ள பேசுகிறார்களே நெசந்தானா என்று பதிவிட்டுள்ளார்.
சூப்பு ஸ்டாரை மீம்ஸ் போட்டே அரசியலுக்கு வராம காலி பண்ணியாச்சி. அதனால கமாண்டர் சுறாவை வச்சி ஆட்சியை புடிக்க தாமரை ஆர்மி திட்டம் போடுது.
— Blue Sattai Maran (@tamiltalkies) June 17, 2023
நம்மாளு ரெய்டுல சிக்குனதால வேற வழி இல்லாம அரசியலுக்கு வந்தாக வேண்டி கட்டாயப்படுத்தி இருக்காங்கன்னு ஊருக்குள்ள பேசிக்கறாங்களே… நெசந்தானா? pic.twitter.com/H29yDS9Iqf
இதனைப் பார்த்த ரசிகர்கள், யாரு கட்சி ஆரம்பிச்சாலும் அவங்க பிஜேபி சொல்லித் தான் கட்சி ஆரம்பிக்கிறாங்க திஸ் புளுத்தி மாறன் லாஜிக் .. ஒரே டயலாக்கை தான் யார் அரசியலுக்கு வந்தாலும் பேசுவீங்களாடா டயலாக்கை மாத்துடா.. எனவும்,
எவன் திமுக ஓட்ட பிரிக்க வந்தாலும் உடனே இப்படி ஒரு புரளியை கிளப்பி விட வேண்டியது. ஆனால் உங்கள மாதிரி கொத்தடிமைகள் இருக்கிற வரைக்கும் திமுகவ யாராலும் அடிச்சுக்கவே முடியாது ப்ளூ சட்டை.
தாமரை ஆர்மி, நம்மை ஆளும் பரிதாப நிலையில் தமிழ் நாடு இல்லை. விஜய்யே இருந்தாலும், யோசித்து தான் ஓட்டு போடுவோம். இன்றைய நிகழ்ச்சியில் மாணவி ஒருவர் கூறியது.
அரசியலுக்கு வருவது அவரின் சொந்த விருப்பம். கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் எப்படி பாஜகவை ஆதரிப்பார். அம்பேத்கர் பெரியார் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை படிக்க சொன்னவர் பாஜக வில் எப்படி சேருவார். உங்களின் விருப்பத்தை கருத்தாக மக்கள் மத்தியில் திணிக்க கூடாது என்று பலதரப்பட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
0
0