தமிழ் சினிமாவின் முன்னணி டாப் ஹீரோ என்ற அந்தஸ்தில் இருக்கும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் திரிஷா. கெளதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத் உட்பட பலர் நடிக்கின்றனர்.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஜய் ரசிகர்கள் மிகப்பெரிய ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். காரணம் லோகேஷ் இயக்கத்தில் வெளிவரும் வரும் வித்தியாசமான, மரண மாஸாக கொண்டாடப்படும் படமாக இருக்கும் என்பதால் தான். அண்மையில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான கவனத்தை அதிகரித்தது. மேலும், லியோ படத்திற்கு சென்சார் யூ/ ஏ சான்றுகள் வழங்கி உள்ளது.
இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், நேற்று 6:30மணிக்கு படத்தின் டிரைலர் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. இதற்காக ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தனர். அதன்படி இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி படத்தின் மீதான கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த டிரைலரில் “‘எவனோ ஒரு தே**யா பையன் என்னை மாதிரி’ இருக்கான்னு ஆளாளுக்கு என்ன போட்டு உயிரை எடுத்தா நான் என்னடி பண்ணுவேன்? என விஜய் ஆக்ரோஷமாக பேசுகிறார். இதில் விஜய் டபுள் ஆக்ஷனில் நடித்துள்ளார். ஒரு விஜய் சீரியல் கில்லராகவும் இன்னொரு விஜய் ஜாக்லெட் பேக்ட்ரி நடத்துபவராகவும் ட்ரைலரில் காட்டப்பட்டுள்ளது. ட்ரைலர்பார்த்து விஜய் ரசிகர்கள் செம ஹேப்பி ஆகிவிட்டனர்.
இந்நிலையில் விஜய் ட்ரைலரில் மோசமான கெட்டவார்த்தைகளை பேசியிருப்பதை விமர்சித்துள்ள பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன்,”Vijay during audio launch and fans meet: நண்பா.. நண்பி. குட்டிஸ். நல்லா இருக்கீங்களா? குடும்பத்த பாத்துக்கங்க. நல்ல விஷயங்களை தேடிப்படிங்க. ஒழுக்கம் முக்கியம்… Vijay in movies: த்தா.. யார்றா அந்த தே*யா பையன்? என்னை மாதிரியே இருக்கான். *ம்மால. தம்பி. தேங்கா பத்தை சாப்பிடுங்கள். வாழ்க வளமுடன்” என விமர்சித்துள்ளார்.
பொதுவெளியில் நல்லவர் மாதிரி பேசி நடித்துவிட்டு பணம் சம்பாதிக்க காது கூசும் அளவுக்கு இப்படி பச்சையா கெட்டவார்த்தை பேசி டெம்ப்ட் செய்வதாக அவர் திட்டி தீர்த்துள்ளார்.
குழந்தை, கணவருடன் செட்டிலான இளம்பெண் சமூக வலைதளம் மூலம் இளைஞருடன் பழகி வீட்டை விட்டு ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
கள்ளக்குறிச்சியில் கலைஞர் கனவு இல்லம் திட்ட பயனாளிகளைத் தேர்வு செய்வதில், திமுக எம்எல்ஏ மற்றும் ஒன்றிய திமுக நிர்வாகிகளிடையே சலசலப்பு…
'வாடிவாசல்' படத்திற்கான முக்கிய அப்டேட் சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘வாடிவாசல்’ திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து…
தென்காசி அருகே பெண்ணாக மாற முயற்சித்து, சக திருநங்கைகளால் அறுவை சிகிச்சை செய்ய முற்பட்ட இளைஞர் உயிரிழந்துள்ளார். தென்காசி: தென்காசி…
நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாக கொண்டாடப்பட்டு வருகிறார். ஆனால் சினிமாவுக்கு முழுக்கு போட்டு முழு நேர அரசியல்வாதியாக…
குட் பேட் அக்லி படம் எதிர்பார்த்த வசூலைக் குவித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தால், அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக்…
This website uses cookies.