58 வடைக்கு GST ரசீது எங்கே? கங்குவாவை பங்கம் செய்த ப்ளூ சட்டை மாறன்!

Author: Udayachandran RadhaKrishnan
16 November 2024, 5:12 pm

கங்குவா திரைப்படம் வெளியாகி மோசமான விமர்சனத்தை பெற்று வருகிறது. இதற்கு காரணம் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசிய பேச்சுதான் என கூறப்படுகிறது.

படத்தல் ஏகப்பட்ட மைனஸை வைத்துக் கொண்டு கொஞ்சம் கூட கூசாமல் படம் 2000 கோடி ரூபாய் வசூல் செய்யும் என எப்படி கூறலாம் என நெட்டிசன்கள் சரமாரி கேள்வி கேட்டு வருகின்றனர்.

58 வடைக்கு ஜிஎஸ்டி ரசீது எங்கே?

கங்குவா படம் குறித்து டரோல்கள் பறக்கும் நிலையில், பிரபல சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன் தொடர்ச்சியாக கங்குவா படத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

Kanguva Box Office Collection

நேற்று படத்தின் முதல் நாள் வசூல் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதும் வடை சுட ஆரம்பிச்சுட்டாங்க என கலாய்த்தார்.

அவர் வெளியிட்ட பதிவில், எலே வீரபாகு.. ஒவ்வொரு தடவையும் கலக்சன் சொல்றப்ப GST சலான் ஆதாரத்தை வெளியிடுவேன்னு சொன்னியே..

Blue Sattai Maran

58 வடைக்கு ரசீது எங்க? சீக்கிரம் சொல்லப்பா. எல்லாருக்கும் ஏகப்பட்ட ஜோலி கெடக்கு என பங்கமாக கலாய்த்துள்ளார்.

  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!