அதையும் மீறி படம் பார்க்க போனால் நீங்க தான் ‘ஆடு” – பிரித்து மேய்ந்த ப்ளூ சட்டை மாறன்!

Author:
6 September 2024, 11:33 am

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து நேற்று வெளியான திரைப்படம் தான் கோட். இந்த திரைப்படம் விஜய்யின் 68வது திரைப்படமாக வெளியாகி உலகம் முழுக்க விஜய் ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்திற்கு ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்துள்ளதை பற்றி பார்ப்போம்…. படத்தோட கதையே பழைய கதை. பழைய கதை என்றால் அதன் மேக்கிங் எப்படி இருக்கும் அப்படின்னு உங்களுக்கே தெரியும்.

நீங்க யூகித்ததை விட ரொம்ப மோசமா தான் இந்த படத்தை எடுத்து வச்சிருக்காங்க. படத்தின் ஆரம்பத்திலேயே கென்யாவில் ஒரு சண்டை காட்சி வருது. அங்கிருந்து கண்டினியூட்டி எடுத்துட்டு வராங்க. அதை வைத்து இவங்க என்ன செய்தார்கள் என்பதை படத்தில் சொல்லவே இல்ல.

அதேபோல பாங்காங் போறாங்க அங்க ஒரு கனெக்டிவிட்டி எடுத்துட்டு வராங்க. அது எதுக்குன்னே நமக்கு தெரியல. படத்துல ரெண்டு விஜய் இருக்காங்க ஒரு விஜய் இன்னொரு விஜய் அடிக்கும் போது விஜய் அடிக்கிறார் என சந்தோஷப்படுவதா? ஒரு விஜய் அடி வாங்குகிறார் என வருத்தப்படுவதா என்றே தெரியல.

vijay

முதல்ல இந்த படத்தை எதுக்கு டபுள் ஆக்ஷன்ல எடுத்தாங்கனே புரியல. இவரிடத்தில் அவர் சென்று ஆள் மாறாட்டம் செய்கிறார் என்பது போன்ற ஒரு சுவாரசியமும் கிடையாது. அது மட்டுமில்லாம டிஏஜிங் டெக்னாலஜி இருக்கிறது அப்படிங்கறக்காக பயன்படுத்தினோம் அப்படின்னு பயன்படுத்திருக்காங்க.

டிஏஜிங் இருந்தும் படத்துக்கு எந்த விதமான நன்மையும் கிடையாது. படத்தோட உண்மையான வில்லன் யார் அப்படின்னு கேட்டீங்கன்னா அது இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தான். பாடல்களும் சரியில்ல படத்தோட இசையும் சரியில்ல. கிளைமேக்ஸ்ல கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஒரு சண்டை காட்சி இருக்கிறது.

அதுக்கு கூட பின்னணி நல்லா இல்ல. கிரிக்கெட் கமெண்ட்ரியா ஓட விட்டிருக்காங்க அது மட்டும் இல்லாம படம் முழுக்க தோனி புராணமாவே இருக்குது. இந்த படத்துல கதைன்னு ஒண்ணுமே கிடையாது. வெங்கட் பிரபு ஸ்கிரிப்ட் ஒழுங்கா செய்யாமல் டெக்னாலஜி அதிகமா பயன்படுத்திருக்காரு.

இதுதான் படத்தோட மிகப்பெரிய பலவீனமாக பார்க்கப்படுது. கால் மணி நேரம் படத்தை எடுத்து இருந்தா கூட இந்த படத்தை உட்கார்ந்து பார்த்திருக்க முடியும். ஆனால் மூணு மணி நேரம் படத்தை எடுத்து மூச்சு வாங்க வச்சுட்டாங்க.

அதையும் மீறி நீங்க படம் பார்க்க போனால் நீங்க தான் ஆடு. அதாவது “கோட்” என பங்கமாக கலாய்த்து தள்ளியுள்ளார். ப்ளூ சட்டை மாறனின் அவரின் இந்த ரிவ்யூ தற்போது இணையத்தில் அஜித் ரசிகர்களால் அதிக அளவில் பகிரப்பட்டு கலாய்க்கப்பட்டு வருகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 279

    0

    0