தலைவர் தேறமாட்டார்… “லால் சலாம்” ரஜினியை பங்கமா கலாய்த்த Blue சட்டை மாறன்!

Author: Shree
9 May 2023, 1:43 pm

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடித்து வருகின்றனர். முஸ்லீம் நபராக இப்படத்தில் நடித்துள்ள ரஜினி மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடித்துள்ளார்.

இதற்காக ரஜினி மும்பைக்கு புறப்பட்டு சென்று அப்படத்தின் ஆரம்ப வேளைகளில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் நேற்று இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டிருந்தது. இதில் கலவரம் வெடிக்க, ரஜினிகாந்த் இஸ்லாமியர் போல தாடி வைத்து, தொப்பி அணிந்து, கண்ணாடி அணிந்து ஸ்டைலாக வர மாதிரி போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும் ரஜினிக்கு ஒர்த்தா இது இல்லை என ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். என்னடா இது பாட்ஷா படத்தில் மாணிக் பாட்ஷாவாக கெத்தாக மாஸாக வந்த ரஜினிகாந்த்தை லால் சலாம் படத்தில் சோன்பாப்டி விற்கும் லோக்கல் பாய் மாதிரி ஆக்கிட்டீங்க என பலர் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

குறிப்பாக பிரபல திரைப்பட விமர்சகர் Blue சட்டை மாறன் ‘ ‘ஏன்டா இது ஒரிஜினல் போஸ்டர்னு சொல்ல மாட்டீங்களா.. ரெண்டு நாளா இது எவனோ ட்ரோல் பண்றதுக்கு போட்டதுனு நெனச்சி போய்ட்டு இருந்தேன்… போஸ்டருக்கு கூட தலைவர் தேற மாட்டார் போலயே.. இவனுங்க எத நம்பி படத்த எடுக்குறானுக”? என கிண்டல் அடித்து பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/tamiltalkies/status/1655618127437393922/photo/1

  • Madha Gaja Raja box office collection வசூல் ராஜாவாக மாறிய விஷால்…மதகதராஜா படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா..!