“கங்குவா” படத்திற்கு ஆஸ்கர் உறுதி – ஜோதிகாவுக்காக மனம் இறங்கிய ப்ளூ சட்டை மாறன்

Author:
18 November 2024, 9:13 pm

கங்குவா தோல்வி:

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவந்து திரையரங்களில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் தான் கங்குவா. இந்த திரைப்படத்தின் பிரமோஷன் போது சூர்யா ஓவராக படத்திற்கு ஹைப் கிளம்பிவிட்டார்.

Kanguva Day 3 boxoffice collection

ரூ. 2000 கோடி வசூல் ஈட்டி தமிழ் சினிமாவில் மாபெரும் வரலாற்றை படைக்கும் என்றெல்லாம் சூர்யா வாய்விட்டு பின்னர் ஏன் தான் பேசினோமோ என முழித்துக் கொண்டிருக்கிறார் .

இந்த திரைப்படம் வெளியான முதல் நாளிலிருந்து மிக மோசமான விமர்சனத்தை சந்தித்து வருகிறது. இப்படியான நேரத்தில் சூர்யாவுக்கு ஆதரவாக ஜோதிகா குரல் கொடுத்திருந்தார். அதாவது 3 மணிநேரம் படத்தில் ஒரு அரை மணி நேரம் மட்டும் படம் நல்லா இல்லை அதை நான் ஒப்புக்கொள்கிறேன்.

ஜோதிகா சப்போர்ட்:

UpdateNews360_Jothika

ஆனால், மொத்த படத்தையும் குறை சொல்வது தவறு என ஜோதிகா வந்து தன் பங்குக்கு சூர்யாவை அசிங்கப்படுத்தி விட்டார். இதனால் ஜோதிகாவையும் சேர்த்து சூர்யா படத்தையும் சூர்யாவையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள் ரசிகர்களும் பிரபலங்களும்.

ஆஸ்கர் விருது உறுதி:

அந்த வகையில் பிரபல விமர்சகர் ஆன ப்ளூ சட்டை மாறும் தனது twitter பக்கத்தில் எதுக்கு சார் வம்பு? படம் நன்றாக இல்லை என்று சொன்னால் திட்டமிட்ட சதி… வன்மம்… தொன்மம் என்று திட்டுவீர்கள்.

blue sattai maran

உங்களுக்கு ஆஸ்கார் உறுதி உலகின் மிகச் சிறந்த படம் தாங்குவா தான் ஆள விடுங்கள் சாமியோ.. போங்கய்யா என இரண்டாவது தடவை பாருங்கள் பப்ளிக் ரிவ்யூ சோசியல் மீடியா முழுவதும் அன்பை விதைத்து தள்ளுங்கள். ஸ்பிரெட் பாசிட்டிவிட்டி என குறிப்பிட்டு பங்கமாக கலாய்த்து தள்ளி இருக்கிறார்.

  • Nayanthara and Vignesh Shivan viral video சோதிக்காதிங்கடா…விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விக்னேஷ் சிவன்…வைரலாகும் இன்ஸ்டா பதிவு..!
  • Views: - 196

    0

    0