ஜவான் படத்தை பார்த்திட்டு உயிரோட வீடு திரும்புவேனான்னு தெரியல – பிரபலத்தின் பதிவால் விழி பிதுங்கும் கோலிவுட்!

Author: Shree
5 September 2023, 3:47 pm

தமிழ் சினிமாவின் copycat இயக்குனர் என மோசமாக விமர்சிக்கப்பட்ட பிரபலம் ஆனவர் அட்லீ. இவரது இயக்கத்தில் வெளியான ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்து வசூலில் பட்டயகிளப்பியிருந்தாலும் அது அத்தனை காப்பியடிக்கப்பட்ட படங்கள் என்பது மோசமாக விமர்சிக்கப்பட்டது.

ஆனாலும் அட்லீ துவண்டுவிடவில்லை, அவரின் மார்க்கெட்டும் குறைந்துபோகவில்லை. ஆம், தற்போது பாலிவுட்டின் கிங்காங் ஷாருக்கானை வைத்து அட்லீ ஜவான் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ‘ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்’ சார்பாக ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்டது. இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7ம் தேதி ரிலீஸ் ஆகிறது. முன்பதிவிற்கான டிக்கெட்டுகள் விற்பனையாகி வருகிறது. படத்தின் ப்ரோமோஷன்கள் படு பிசியாக நடைபெற்றது.

படம் நன்றாக ஓடவேண்டும் என வேண்டி ஷாருக்கான், நயன்தாரா திருப்திக்கு சென்று சுவாமி தரிசனம் செய்த விடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது இப்படியான நேரத்தில் பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டரில்,

‘சனாதானம்னா என்ன? அந்த தர்மத்துல உங்களுக்கு உடன்பாடு இருக்கா?’ , ‘ஜவான் படத்தோட ரன்னிங் டைம் 2 hrs 50 minutes. இதை முழுசா பாத்துட்டு உயிரோட வீடு வந்த சேர முடியுமான்னு தலையை பிச்சிட்டு இருக்கேன். நீ வேற ஏன்டா புரியாத டாபிக்கை பத்தி கேள்வி கேக்கற?’ என சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டு திரைத்துறையினரின் கோபத்தை தூண்டியுள்ளார்.

இவர் ஏற்கனவே அட்லீயின் ராஜா ராணி, மெர்சல் உள்ளிட்ட படங்களை மோசமாக விமர்சித்திருந்தார். தற்ப்போது பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள ஜவான் படம் வெளியாவதற்கு முன்னரே இப்படி விமர்சித்திருப்பது படத்தின் மீதான மக்களின் பார்வை குறைய வாய்ப்புள்ளது என திரையுறையினர் அச்சம் அடைந்துள்ளனர்.

  • goundamani is the only actor who called rajinikanth without respect ரஜினியை வாடா என்று அழைத்த ஒரே காமெடி நடிகர்? அந்த அளவுக்கு கெத்தா இவரு?
  • Close menu