தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமான புதிதில் பல்வேறு விமர்சனங்களை சந்தித்து ஒல்லியான உடல் அமைப்பாலும் பார்ப்பதற்கு அப்பாவி போன்ற முகத் தோற்றத்தை வைத்து ஹீரோவாக நடித்து பெரும் விமர்சனத்தை சந்தித்தவர் தான் தனுஷ் . ஆனால், அந்த அவமானத்தை எல்லாம் தாங்கிக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக தனது திறமையை வளர்த்துக் கொண்டு இந்த தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராகவும் தவிர்க்க முடியாத பிரபலமாகவும் பார்க்கப்பட்டு வருகிறார்.
தற்போது நடிகர் தனுஷின் நடிப்பிலும் இயக்கத்திலும் வெளிவந்து சக்கை போடு போட்டு வரும் திரைப்படம் தான் “ராயன்” இந்த திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடிக்க இவர்களுடன் செல்வராகவன், துஷாரா விஜயன், பிரகாஷ்ராஜ் , அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ,சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் வெளியான நாட்களில் இருந்து ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று வசூலில் பட்டய கிளப்பி வருகிறது.
குறிப்பாக தனுஷின் நடிப்பும் அவரது இயக்கமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனங்களை கிடைத்து வரும் நிலையில் எந்த திரைப்படத்திற்கும் எதிர்மறையான விமர்சனங்களை கூறி வரும் ப்ளூ சட்டை மாறன் கையில் இருந்து சிக்கவில்லை “ராயன்”.
“படத்திற்கு ராயன்னு பேர் வச்சதுக்கு பதிலா கோவிந்தன்னு வச்சி இருக்கலாம். படத்துல ஹீரோ கைல ஒரு ஊசி வச்சுக்கிட்டு ஒரு லட்சம் பேரை குத்துறாரு. அதனால ஹீரோவுக்கு கோவிந்தன்னு பேர் வச்சிருந்தால் “குத்தூசி கோவிந்தனு” கூப்பிட்டு இருக்கலாம். ஒரு ரைமிங்காவது இருந்திருக்கும் என தனுஷின் ராயன் படத்தை படு பங்கமாக கலாய்த்து தள்ளி இருக்கிறார் ப்ளூ சட்டை மாறன். இவரின் இந்த விமர்சனம் தனுஷ் ரசிகர்களை கடும் கோபத்திற்கு உள்ளாகியுள்ளது.