“வேல வெட்டி இல்லாம… நீ எல்லாம் எதுக்கு சினிமாவுக்கு வந்த? “சிங்கப்பூர் சலூன்”னை விளாசிய ப்ளூ சட்டை!

Author: Rajesh
26 January 2024, 4:25 pm

ஆர் ஜே-வாக தனது கெரியரை தொடங்கிய ஆர்ஜே பாலாஜி தற்போது இயக்குனர், நடிகர் என பிசியாக தமிழ் திரையுலகில் வலம் வருகிறார். அந்த வகையில், ஆர்ஜே பாலாஜி இயக்கிய LKG, மூக்குத்தி அம்மன் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வசூலை வாரி குவித்தது. கடந்த ஆண்டு ஆர்ஜே பாலாஜி நடிப்பில் வெளிவந்த வீட்ல விசேஷம் திரைப்படமும் அதிக அளவில் ரீச்சானது.

அவரது திரைப்படங்கள் காமெடி கலந்த கலாட்டாவாக வெளியாகி பெருவாரியான ரசிகர்களை ஈர்த்தது. இவர் ஆரம்பத்தில் ரிலீஸ் ஆகும் திரைப்படங்களை ஏடாகூடமாக விமர்சித்து அதன் மூலம் பிரபலம் ஆகினார். மிக குறுகிய காலத்திலே டாப் ஹீரோ ரேஞ்சிற்கு பிரபலம் ஆன ஆர்ஜே பாலாஜி நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் “சிங்கப்பூர் சலூன்” திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தை விமர்சித்துள்ள பிரபல திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், படத்தில் பெரிய ஹேர் ஸ்டைலிஸ்ட் ஆகவேண்டும் என ஆசைப்படும் RJ பாலாஜி ஒரு காட்சியில் கூட ஹேர்கட் பண்ணவே இல்லை. ஒரு இடத்தில் கூட படம் ரசிக்கும் படி இல்லை. சத்யராஜ் காட்சிகளில் தான் காமெடி இருக்கு. மற்றபடி ஆர்ஜே பாலாஜிக்கு சுத்தமாக நடிப்பே வரவில்லை. சினிமாவுக்கு வந்து இத்தன வருசம் ஆகியும் அவருக்கு நடிக்க வரல.

காமெடி மட்டும் இல்ல அவர் முகத்தில் எந்த எமோஷனலும் இல்ல. ஆக மொத்தம் வேல வெட்டி இல்லாம நேரம் போகலைன்னு இப்படி ஒரு படத்தை எடுத்து வச்சியிருக்காங்க படத்துல சொல்லிக்கொள்ளும்படி ஒன்னுமே இல்லை என ப்ளூ சட்டை மாறன் ஆர்ஜே பாலாஜியை பங்கமாக விமர்சித்துள்ளார். ஆர்ஜே பாலாஜி எத்தனை நடிகர்களின் படத்தை விமர்சித்து தயாரிப்பாளர் தலையில் மண்ணு போட்டிருப்பார். இப்போ நிலைமை பார்த்தியா வச்சி செஞ்சிட்டாப்புல ப்ளூ சட்டை என நெட்டிசன்ஸ் கலாய்த்துள்ளனர்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 500

    0

    0