“குட்டி தளபதியா”? ஒரே வார்த்தையில் சிவகார்த்திகேயனின் சோலி முடித்த ப்ளூ சட்டை மாறன்!

Author: Rajesh
17 February 2024, 4:38 pm

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் stand-up காமெடியன் ஆகவும், மிமிக்கிரி செய்தும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். கலக்கப்போவது யாரு என்னும் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்த இவர், சில குறும்படங்களில் நடித்தார். பின்னர், விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது பேச்சின் மூலம் மக்கள் முதல் பிரபலங்கள் வரை பரிச்சயம் பெற்றார்.

sivakarthikeyan-updatenews360

பின்னர், மெரினா, 3 உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இவர், மனம் கொத்தி பறவை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல் என அடுத்தடுத்து இவர் நடித்த திரைப்படங்கள் வெற்றி பெறவே, முன்னணி நடிகர்களில் ஒருவராக தமிழ் திரையுலகில் வலம் வருகிறார். மேலும், நடிகராக மட்டுமல்லாது, தயாரிப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகராகவும் திகழ்ந்து வருகிறார். கடைசியாக சிவகார்த்திகேயன் அயலான் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் இன்று தனது 39வது பிறந்தநாள் கொண்டாடும் சிவகார்த்திகேயனை அவரது ரசிகர்கள் ” குட்டி தளபதி” என்று கூறி பூஸ்ட் அப் செய்து வருகிறார்கள். மேலும், 12 வருடத்தில் 21 படத்தில் நடித்து அசுர வளர்ச்சி என்றெல்லாம் புகழராம் சூட்டினார்கள். அத்துடன் #குட்டிதளபதி என்ற பெயரில் ட்விட்டர் தளத்தில் ரெண்ட் ஆகியதை அடுத்து இது குறித்து தனது கருத்தை பதிவு செய்து பங்கமாக கலாய்த்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். ’12 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி… குட்டி தளபதி சிவகார்த்திகேயன் பிறந்தநாள் இன்று என்ற போஸ்டர் ஒன்றை இணைய பக்கத்தில் ஷேர் செய்து ‘குட்டி தளபதியா..?’ என நக்கலாக கேள்வி எழுப்பியுள்ளார். இவரின் இந்த கமெண்ட்ஸ் அனைவரது கவனத்தையும் ஈர்த்துவிட்டது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 322

    0

    0