ரஜினியை Encounter’ல போட்ருக்கனும்…. வேட்டையன் படத்தை பிரிச்சி மேய்ந்த ப்ளூ சட்டை!

Author:
11 October 2024, 3:58 pm

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தா. செ ஞானவேல் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் வேட்டையன் ஆயுத பூஜையின் ஸ்பெஷலாக வெளிவந்திருக்கும் இந்த திரைப்படம் ரஜினி ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறது.மேலும் படத்திற்கான விமர்சனங்களும் பாசிட்டிவாகவே வந்து கொண்டிருந்தது.

vettaiyan

இந்நிலையில் இந்த திரைப்படத்திற்கு விமர்சனம் செய்திருக்கும் ப்ளூ சட்டை மாறன் வீடியோவும் அவரது விமர்சனமும் சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாகவது, இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தப்பு செஞ்சவர் யாராக இருந்தாலும் அவரை என்கவுண்டரில் போட்டு தள்ளறாரு.

ஆனால், கதைப்படி அவரே ஒரு கொலைகாரர் தான். அப்படி பார்த்தால் இன்னொரு நல்ல அதிகாரிய வச்சு அவரை போட்டு தள்ளி இருக்கணும். அதுக்கு மாறாக அவருக்கு எந்த தண்டனையும் கொடுக்காத மத்தவங்களுக்கு பாடம் எடுக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் அமிதாப் பச்சனை வச்சு பாடம் எடுக்கிறார். அமிதாப் பச்சன் வாங்குன காசுக்கு அதை ரசிச்சு கேட்கிறார்.அதேபோல் வில்லன் நீட் கோச்சிங் சென்டர் வச்சு அயோக்கியத்தனம் பண்றான். நியாயமா நீட் கொண்டு வந்தவங்கள வச்சு தானே படம் எடுத்திருக்கணும் நீட் கோச்சிங் சென்டர் வச்சு இருக்கிறவன் அயோக்கியன் என்ற மாதிரியும்.

vettaiyan

நீட்ட கொண்டு வந்தவங்க யோக்கியன் என்ற மாதிரியும் இந்த படத்தை எடுத்து வச்சிருக்காங்க. அதே போல் படத்தில் சண்டை காட்சிகள் அப்படின்னு எடுத்துக்கிட்டோம்னா சிங்கிள் சாட்டில் ஒரு ஃபைட் இருக்கும்.. அந்த சண்டைக் காட்சிகள் தலைவரை கஷ்டப்படுத்தக் கூடாது அப்படின்னு எடுத்து வச்சிருக்காங்க போல. இருந்தாலும் அந்த பைட்டு கொஞ்சம் பாக்குறதுக்கு நல்லாவே இருந்துச்சு.

கிளைமாக்ஸ் பைட் தான் ரொம்ப காமெடியா இருந்தது. மியூசிக் ஃபர்ஸ்ட் பாடல் நல்லா இருந்துச்சு. இடையில இடையில மியூசிக் கொஞ்சம் எக்ஸ்ட்ராவே இருந்தாலும் இந்த படத்துல அனிருத் மியூசிக் ஓரளவுக்கு ஓகே. அமிதாப்பச்சனின் கேரக்டர் அவர் நல்லாவே பண்ணிருக்காரு. சிறப்பா நடிச்சிருக்காரு. இந்த படம் எப்படி இருக்கு அப்படின்னு கேட்டீங்கன்னா ஒரு ஆயிரம் படத்துல அடிச்சு துவைத்த கதையை வேட்டையின் படத்தில் திரும்ப எடுத்து வச்சிருக்காங்க. படம் முழுக்க உட்கார்ந்து பார்க்கும்போது இது எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே அப்படிங்கிற ஃபீலிங் நமக்கு வந்துரும்.

இதையும் படியுங்கள்: அந்த தப்பு பண்ணிட்டு இரண்டு மாதம் அழுதேன் – வேதனை பகிர்ந்த நடிகர் விக்ரம்!

blue sattai maran

வேட்டையன் படத்தில் உள்ள ஒவ்வொரு சீன் எங்கேயிருந்தோ எடுத்து இது உள்ள வச்சிருக்காங்க. படத்துல மொத்தம் ஐட்டமும் சேர்த்து வச்சு படத்தை எடுத்து வச்சிருக்காங்க. ரவுடி கதை வேணுமா ரவுடி கதை இருக்கு. சட்டத்தை கையில் எடுக்கும் ஹீரோ கதை வேணுமா அதுவும் இருக்கு, கார்ப்பரேட் முதலாளிகள் கதை வேணுமா அதுவும் இருக்கு, கஞ்சா கடத்தல் கதை வேணுமா அதுவும் இருக்கு என மொத்தத்தையும் கலந்து அடுச்சு வேட்டையன் என்ற படத்தை எடுத்து வச்சிருக்காங்க என ப்ளூ சட்டை மாறன் பங்கமாக கலாய்த்து இருக்கிறார்.

  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!